- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
என்னது.... பென்குயின் முட்டைகளை வேகவைத்தால் அப்படியே தெரியுமா? உண்மை என்ன?
பென்குயின் முட்டை வேகவைக்கும்போது திடமான வெள்ளை நிறமாக மாறும் கோழி முட்டையைப் போல் இல்லாமல், ஒளிஊடுருவக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Author: Gowtham
Published: March 31, 2025
ஒரு வேகவைத்த முட்டையை உடைப்பதாக கற்பனை செய்து பாருங்கள், அப்போது அந்த முட்டையின் வெள்ளைக்கரு வெள்ளையாகவே இல்லை என்பதை நினைத்து பார்க்க முடிகிறதா? இது தொடர்பாக
ஒரு வைரலான ரெடிட் பதிவு பென்குயின் முட்டையை வேகவைத்து உடைத்து பார்த்தால், கோழி முட்டையை போல் வெள்ளையாக தெரியாமல் வெளிப்படையாக தெரியும் என்று கூறுகிறது.
இதன் பின்னல் உள்ள அறிவியல் தான் என்ன? பார்ப்பதற்கு முன், முதலில் பெங்குவின் முட்டைகளின் அமைப்பையும், கொதிக்கும் செயல்முறையையும் பார்ப்போம். ஆனால் IFLScience இன் 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் பின்னால் உண்மையான அறிவியல் இருப்பதாகக் கூறுகிறது.
பென்குயின் முட்டை அமைப்பு :
பென்குயின்கள் பறவைகள் என்றாலும், அவை மிகவும் குளிர்ந்த சூழலான ஆன்டார்க்டிகா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன. இதனால், அவற்றின் முட்டைகள் கடுமையான சுற்றுச்சூழல் நிலைகளைத் தாங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. பெங்குவின் முட்டைகளின் ஓடு பொதுவாக தடிமனாகவும், உறுதியாகவும் இருக்கும். முட்டையின் உள்ளே உள்ள வெள்ளைப் பகுதி (ஆல்புமின்) மற்றும் மஞ்சள் கரு (யோல்க்) ஆகியவை மற்ற பறவைகளின் முட்டைகளைப் போலவே புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் ஆனவை.
பென்குயின் முட்டையை வேக வைத்தால் என்ன நடக்கும்?
கோழி முட்டையை வேகவைத்த பின் திட வெள்ளை நிறமாக மாறுமல், பென்குயின் முட்டையானது ஒளிஊடுருவக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த IFLScience அறிக்கையின்படி, பென்குயின் முட்டையின் வெள்ளைக்கரு உறைகிறது, ஆனால் ஒளிபுகாதாக மாறாது.
அதற்கு பதிலாக, அது ஜெல்லி போன்ற, வெளிப்படையான தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது, இதனால் உள்ளே இருக்கும் மஞ்சள் கருவைப் பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, கோழி முட்டையை கொதிக்க வைத்தால், வெள்ளைப் பகுதி வெள்ளையாகவும், மஞ்சள் கரு திடமாகவும் மாறுவதை நாம் பார்க்கலாம். ஆனால், இவை வெளிப்படையாக (Transparent) மாறுவதில்லை, அதற்கு மாறாக, அவை ஒளிபுகாத (Opaque) தன்மையைப் பெறுகின்றன.
கோழிகளின் முட்டைகளுடன் ஒப்பிடும்போது பென்குயின் முட்டைகளில் உள்ள கிளைகோபுரோட்டின்களின் கலவை வேறுபட்டிருப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது என்று ஆய்வு கூறுகிறது. கோழி முட்டைகளில் ஓவல்புமின் நிறைந்திருந்தாலும், பென்குயின் முட்டைகளில் சுமார் 25 சதவீதம் பெனல்புமின் உள்ளது, இது அண்டார்டிகாவின் உறைபனியில் பென்குயின் உயிர்வாழ உதவுகிறது.