- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அதிர்ஷ்டசாலியான நபர்.!! நிலநடுக்கத்தில் சிக்கி 5 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு.!
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த ஹோட்டலின் இடிபாடுகளில் சிக்கி 125 மணி நேரத்திற்குப் பிறகு, தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினரால் 26 வயது மதிக்கத்தக்க நபர் காப்பாற்றப்பட்டார்.

Author: Gowtham
Published: April 3, 2025
மியான்மர் நாட்டில் கடந்த 28ம் தேதி 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான தாய்லாந்து தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பிற நகரங்களிலும் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மியான்மரின் மாண்டலே, சாகைங் நகரங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது
இந்நிலையில், மியான்மரின் இராணுவ தலைமையிலான அரசாங்கத்தின் கூற்றுப்படி, இறப்பு எண்ணிக்கை 3,085 ஆக உயர்ந்துள்ளது, 341 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 4,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 500 கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன, மேலும் 800 கட்டிடங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதனால், இடிபாடுகளுக்குக்கிடையே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி சவாலாக உள்ளது. மீட்புக் குழுக்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர், மேலும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இப்படி இருக்கையில், இடிபாடுகளுக்கு அடியில் ஐந்து நாட்கள் போராடி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மியான்மர் மற்றும் துருக்கியைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் நள்ளிரவுக்குப் பிறகு, தலைநகர் நைபிடாவில் உள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர் உயிருடன் இருந்ததை எண்டோஸ்கோபி கேமரா மூலம் கண்டறிந்த பின், 26 வயதான அந்த நபரைக் மீட்டதாக தீயணைப்புத் துறையும் நாட்டின் ஆளும் இராணுவ ஆட்சிக்குழுவும் தெரிவித்தன. இதையடுத்து, மீட்புக்குழுவினர், அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.