- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தரையிறங்கிய சுனிதா வில்லியம்ஸ்! இனி காத்திருக்கும் சவால்கள் என்ன?
சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பூமி திரும்பியுள்ள நிலையில், அவர் உடல்ரீதியாக சந்திக்கவுள்ள பிரச்சினைகள் குறித்த விவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Author: Bala Murugan K
Published: March 20, 2025
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பல மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்த பிறகு, இன்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளார். அவருடன் புட்ச் வில்மோர் என்பவரும் திரும்பியுள்ளார். அவர்கள் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், இந்திய நேரப்படி அதிகாலை 3:27 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடலில் பத்திரமாக இறங்கியது.
ஒரு வழியாக பூமியில் சுனிதா வில்லியம்ஸ் தரையங்கியுள்ள நிலையில், இனி காத்திருக்கும் சவால்கள் விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அவர் செய்யவேண்டிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்ததற்குப் பிறகு, உடலும் மனதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப சில சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டிய அவசியம் விண்வெளியில் ஈர்ப்பு விசை (gravity) இல்லை என்பதால், மனித உடலில் பல மாற்றங்கள் நடக்கும்.
ஏற்படும் பாதிப்புகள்
- எலும்புகளும் தசைகளும் பலவீனமாகும் – பூமியில் எடையுடன் வாழ்வதை விட, விண்வெளியில் எடை இல்லாமல் (weightless) இருப்பதால், நம்முடைய தசைகள், எலும்புகள் குறைந்த வேலை செய்யும். இதனால், அவை பலவீனமாகும்.
- இதயமும் இரத்த ஓட்டமும் மாறும் – பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால், இரத்த ஓட்டம் சரியாக நடக்கும். ஆனால் விண்வெளியில், இரத்தம் தலைக்கு அதிகம் செல்லும். இதனால், பூமிக்கு திரும்பியதும் மயக்கம், கலக்கம், சுறுசுறுப்பாக நடக்க முடியாத நிலை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
- உடல் நச்சுக்கள் வேகமாக வெளியேறாது – பூமியில் நாம் வழக்கமாக வியர்வை, சிறுநீர் போன்ற வழிகளில் நச்சுக்களை வெளியேற்றுவோம். ஆனால், விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்தால், உடலின் இயற்கை செயல்முறைகள் பாதிக்கப்படலாம்.
இந்த பிரச்சினைகளில் இருந்து அவர்கள் திரும்பி வரவேணும் என்றால் மருத்துவ சோதனைகள் மேற்கொண்டு, சில மாதங்கள் உடலினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.இதனை கருத்தில் கொண்டடு இன்று பூமியில் தரையிறங்கியவுடன் அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு ஸ்ட்ரெச்சரில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மனநிலையை மீண்டும் சரிசெய்தல்
விண்வெளியில் இருக்கும் போது, குடும்பத்தினரை, நண்பர்களை நேரில் பார்க்க முடியாது. அத்துடன், ஒரே சில பேருடன் தான் தொடர்ந்து பழக வேண்டும்.எனவே, அதே மனநிலையில் இவ்வளவு மாதங்கள் வாழ்ந்த காரணத்தால் அவர்கள் பழைய நிலைமைக்கு திரும்ப கொஞ்சம் நாட்கள் ஆகும்.
உணர்ச்சி
விண்வெளியில் நீண்ட நாட்கள் கழித்த பிறகு, பூமிக்கு திரும்பியதும், மீண்டும் இயல்பான வாழ்க்கையில் கலந்து கொள்ள சிரமம் ஏற்படலாம்.
மன அழுத்தம் – நீண்ட நாள் தனிமை, வேலைக்கு ஏற்பட்ட மன அழுத்தம் போன்றவை, பூமிக்கு திரும்பியதும் மனநலத்தைக் குறைக்கக்கூடும்.
தொழில்நுட்பத்துடன் பழகிய பழக்கம் – விண்வெளியில் பல செயல்களை இயந்திர உதவியுடன் செய்வார்கள். அந்த விஷயத்தில் பூமிக்கு வந்ததும், இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதில் சிரமம் இருக்கலாம்.
இதற்காக, மனநல ஆலோசனை, குடும்பத்தினரின் ஆதரவு, மற்றும் சமூகவாழ்வில் மீண்டும் இணைவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.
புதிய மருத்துவ பரிசோதனைகள்
விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்த பிறகு, மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய, மருத்துவ பரிசோதனைகள் அவசியமாகும்.
- இரத்த பரிசோதனை
- எலும்பு மற்றும் தசை ஆராய்ச்சி
- இதய செயல்பாடு தொடர்பான சோதனைகள்
இந்த ஆய்வுகள், எதிர்காலத்தில் நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல்
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து, எதிர்கால விண்வெளிப் பயணிகளுக்கு பயிற்சி அளிப்பார்கள். கூடவே, புதிய விண்வெளி திட்டங்களில் ஆலோசகராக பணியாற்ற வாய்ப்பு இருக்கும். விண்வெளியில் சில மாதங்கள் வாழ்ந்த பிறகு, பூமியில் திரும்புவதற்கான சவால்கள் பெரியதாக இருந்தாலும், முறையான மருத்துவ பரிசோதனைகள், மனநல ஆலோசனை, உடல் பயிற்சி போன்றவற்றின் மூலம் இந்த மாற்றங்களை சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.