- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கிறிஸ் கெய்ல், வில்லியம்சனை முந்தி சாய் சுதர்சன் சாதனை.! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Author: Gowtham
Published: April 10, 2025
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் தற்போது அபாரமான ஃபார்மில் உள்ளார். நேற்று (ஏப்ரல் 09) ஆமதாபாத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
ராஜஸ்தானுக்கெதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் வீரர் சாய் சுதர்சன் அரை சதம் கடந்து 82 ரன்கள் அடித்தார். அதில், 3 சிக்ஸர்களையும் 8 பவுண்டரிகளையும் அடங்கும். இதன்மூலம் தொடர்ந்து ஒரே மைதானத்த்தில் 5 அரைசதம் அடித்து டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்தார். மேலும், போட்டி முடிந்த பின், இதற்காக ஆட்டநாயகன் விருதும் வென்றுள்ளார்.
இந்த இடது கை பேட்ஸ்மேநனான ஐபிஎல் 2025 இல் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 273 ரன்கள் எடுத்துள்ளார். சாயின் இந்த சிறப்பான செயல்பாட்டால், குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. சாய் சுதர்சன் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் 30 இன்னிங்ஸ்களில் மொத்தம் 1307 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 48.40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 141.60 ஆகும்.
லீக்கில் முதல் 30 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆனார், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளிவிட்டார். இந்த லீக்கின் முதல் 30 இன்னிங்ஸ்களில் கெய்ல் 1141 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஷான் மார்ஷ் உள்ளார், அவர் 30 இன்னிங்ஸ்களில் 1338 ரன்கள் எடுத்தார்.
30 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள்
- 1338 - ஷான் மார்ஷ்
- 1307 - சாய் சுதர்சன்
- 1141 - கிறிஸ் கெய்ல்
- 1096 - கேன் வில்லியம்சன்
- 1082 - மேத்யூ ஹேடன்
- 1064 - மைக்கேல் ஹஸ்ஸி