வைரல் வீடியோ.., ரஜத் படிதார் உடன் விராட் கோலி அதிருப்தி? தினேஷ் கார்த்திக்கிடம் விவாதம்.!
கேப்டன் ரஜத் படிதாரிடம் விராட் கோலி மிகவும் கோபமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Author: Gowtham
Published: April 11, 2025
நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தில் படுதோல்வியடைந்தது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை குவித்தது.
Advertisement
இதையடுத்து 164 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி விளையாடியது. அதிரடியாக விளையாடிய அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி அணி சார்பாக கே.எல். ராகுல் 93 ரன்களை விளாசினார்.
இந்த தோல்விக்குப் பிறகு, விராட் கோலி தினேஷ் கார்த்திக்கிடம் கோபமாகப் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்குள் எல்லாம் சரியில்லை என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இந்த காணொளி டெல்லி கேபிடல்ஸ் அணியின் இன்னிங்ஸின் 16வது ஓவரில் எடுக்கப்பட்டது.
Advertisement
நேற்று நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில், 58/4 என ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி, கே.எல்.ராகுலை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியடைந்தது. ஆர்சி அணியின் பவுலிங் பெரிய அளவில் சொதப்பியது. அப்போது, பவுண்டரி லைனில் நின்றிருந்த விராட் கோலி, ரஜத் படிதாரின் கேப்டன்ஷிப் குறித்து, தனது அதிருப்தியை தினேஷ் கார்த்திக்கிடம் விவாதித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
மைதானத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் காரணமாக விராட் கோலி தினேஷ் கார்த்திக்கிடம் மட்டுமல்ல, புவனேஷ்வர் குமாரிடமும் பேசியதாக ஒரு ரசிகர் சமூக ஊடகங்களில் கூறினார். ஆனால் விராட் ஏன் கோபமாக இருந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
No comments yet.
