ஊழியர்கள் ஷாக்... "வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் "- கூகுள் இணை நிறுவனர் கருத்து.!
கூகிளின் இணை நிறுவனர் பிரின், தனது ஊழியர்கள் பந்தயத்தில் முன்னேற வாரத்திற்கு 60 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: March 3, 2025
கூகிள் நிறுவனம் செயற்கை பொது நுண்ணறிவு (AGI) போட்டியில் பின்தங்கியிருக்க விரும்பவில்லை என்பதால், நிறுவனத்தின் இணை நிறுவனர், தனது ஊழியர்களை வாரத்தில் 60 மணிநேரம் வேலை செய்து தினமும் அலுவலகத்திற்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement
கூகுள் நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வார நாள்களில் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். OPEN AI, META, DeepSeek போன்றவற்றால் கடுமையான
போட்டி ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் எனக் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செர்ஜி பிரின் பேசுகையில்,"வாரத்திற்கு 60 மணிநேரம் வேலை செய்வது உற்பத்தித்திறனுக்கு சிறந்தது" என்று கூறினார். மேலும், AI மற்றும் AGI (செயற்கை பொது நுண்ணறிவு) தொடர்பான போட்டி மிகவும் அதிகரித்துள்ளது என்றும், இப்போது இந்தப் பந்தயம் அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார். இதனால், ஊழியர்கள் கடினமாக உழைத்தால், இந்தப் போட்டியில் கூகிள் முன்னேற முடியும் என்று அவர் ஊழியர்களிடம் கூறினார்.
Advertisement
கடந்த ஆண்டு, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேர வேலை நேரத்தை பரிந்துரைத்திருந்தார். அதே நேரத்தில் இந்த ஆண்டு ஜனவரியில், எல் அண்ட் டி தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் வாரத்திற்கு 90 மணி நேர வேலை நேரத்தை முன்மொழிந்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் நடந்தன. இப்போது கூகிள் தனது ஊழியர்களை 60 மணி நேரம் வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு கூகிள் ஊழியர்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Advertisement
இருப்பினும், பல நிறுவனங்களில் இது மாதிரியான யுத்திகளை பயன்படுத்துவதன் மூலம், பணியமர்த்தலைக் குறைப்பதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் ஒரு வழியாக பார்க்கப்படுகிறது.
No comments yet.
