தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய ஆட்கள் தேவை! DIPAM அறிவிப்பு!

பொதுத்துறை வங்கிகள் (PSBs) மற்றும் பட்டியலிடப்பட்ட நிதி நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்ய வணிக வங்கியாளர்களை (Merchant Bankers) மத்திய அரசு நியமனம் செய்ய உள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 25, 2025

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையானது (DIPAM) அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகள் (PSBs) மற்றும் பட்டியலிடப்பட்ட நிதி நிறுவனங்களில் உள்ள அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்ய வணிக வங்கியாளர்களை (Merchant Bankers) தேர்வு செய்வது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் இந்த பணியாளர்கள் பங்கு விற்பனை மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான முக்கிய பணிகளை மேற்கொள்வார்கள். இதற்காக, DIPAM மூன்று ஆண்டுகளுக்கு (தேவையேற்பட்டால் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கபடலாம்) பணியமர்த்துகிறது.

வணிக வங்கியாளர்களின் வேலை விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்படும் வணிக வங்கியாளர்கள் அரசு பங்குகளை விற்பனை செய்ய கீழ்க்கண்ட முக்கிய பணிகளை மேற்கொள்வார்கள்:

1. சந்தை ஆய்வு மற்றும் சரியான விற்பனை நேரத்தை தீர்மானித்தல்

  • பங்குகளை விற்பனை செய்ய ஏற்ற நேரம் எது என்பதை ஆராய வேண்டும்.
  • பங்கு சந்தையின் நிலை, முதலீட்டாளர்களின் ஆர்வம் மற்றும் பொருளாதார சூழ்நிலை ஆகியவை அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.

2. முதலீட்டாளர்களை ஈர்த்து, பங்குகளை விற்பனை செய்வது

  • பொது மற்றும் தனியார் முதலீட்டாளர்களை (Institutions & High-Net-Worth Individuals - HNIs) ஈர்ப்பது முக்கிய பணியாகும்.
  • பங்குகளை வாங்க ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்களை கண்டறிந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

3. பங்குகள் விற்பனைக்கு முன்னர் விளம்பர நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர் சந்திப்பு நடத்துதல்

  • இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பிரபலப்படுத்தி (Roadshow) முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்.
  • விற்பனைக்கு வரவிருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி வாய்ப்புகள், நிதி நிலை, எதிர்கால வளர்ச்சி போன்றவற்றை விளக்கி முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை உருவாக்க வேண்டும்.

4. விற்பனை செயல்முறையை திட்டமிடல் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றுதல்

  • SEBI, RBI, IRDAI, மற்றும் பங்குச் சந்தை விதிகளை பின்பற்றி விற்பனை செயல்முறையை முன்னெடுக்க வேண்டும்.
  • பங்குகள் எந்த விதிமுறைகளை பின்பற்றி விற்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

5.அரசு அதிகாரிகளுக்கு தேவையான ஆதரவு வழங்குதல்

  • DIPAM மற்றும் பங்குச் சந்தை அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும்.
  • அரசு அதிகாரிகளுக்கு சந்தை நிலை பற்றிய புதுப்பிப்புகளை வழங்கி, தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்புக்கான தகுதி மற்றும் பிரிவுகள்

DIPAM வெளியிட்ட அறிவிப்பின்படி, வணிக வங்கியாளர்கள் இரண்டு முக்கிய பிரிவுகளில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

1. Category A+

  • ரூ.2,500 கோடி அல்லது அதற்கு அதிகமான பரிவர்த்தனைகளை (transactions) கையாளும் திறன் கொண்ட வணிக வங்கியாளர்கள் இதில் சேரலாம்.
  • அதிக அளவிலான முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறன், பெரிய நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம், மற்றும் வெற்றிகரமான பங்குவிற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்க வேண்டும்.

2. Category A

  • ரூ.2,500 கோடி மதிப்பிற்குள் பரிவர்த்தனைகளை கையாளும் வணிக வங்கியாளர்கள் இதில் சேரலாம்.
  • சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை ஈர்க்கும் அனுபவம், குறைந்த அளவிலான பங்கு விற்பனை திட்டங்களை செயல்படுத்திய அனுபவம் உள்ள நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்படலாம்.

DIPAM ஒரு குறிப்பிட்ட பங்கு விற்பனை செயல்முறைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக வங்கியாளர்களை தேர்வு செய்யலாம். அரசின் உரிமையை தனியார்மயமாக்கும் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இந்த தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி

வணிக வங்கியாளர்கள் தங்களது விண்ணப்பங்களை DIPAMக்கு 2025 மார்ச் 27க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது மிக முக்கியமான வேலை வாய்ப்பு என்பதால், பொருத்தமான நிறுவனங்கள் அல்லது வணிக வங்கியாளர்கள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்யும் முறை..

  • மேற்கண்ட பணியில் வேளைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் DIPAM அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://dipam.gov.in) RFP ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
  • RFP ஆவணத்தை கவனமாகப் படித்தல் : அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள், பணியமர்த்தல் விதிமுறைகள், மற்றும் கட்டண விவரங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும்.
  • தேவையான ஆவணங்களைத் தயாரித்தல் : விண்ணப்பப் படிவம், நிறுவன விவரங்கள், முன் அனுபவ விவரங்கள், நிதி அறிக்கைகள், மற்றும் பிற ஆதார ஆவணங்களைத் சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல் : RFP ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, விண்ணப்பப் படிவத்தை சரியான தகவல்களுடன் நிரப்பவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்: நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, RFP-யில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (கடைசி தேதி: மார்ச் 27, 2025) அனுப்பவும்.
  • மேலும் விவரங்களுக்கு, அல்லது சந்தேகங்களுக்கு, DIPAM அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும், அல்லது RFP ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தி தொடர்புகொள்ளவும்.

பணியாளர்களுக்கான செலவுகள் மற்றும் அரசு வழங்கும் ஆதரவு

வணிக வங்கியாளர்கள் அரசு சொந்த நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் பணிகளை மேற்கொள்வதால், இதற்கான சில செலவுகளை அவர்களே ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதே சமயம், அரசும் சில விதத்திலான ஆதரவுகளை வழங்குகிறது.

வணிக வங்கியாளர்கள் ஏற்க வேண்டிய செலவுகள்

  1. முதலீட்டாளர் சந்திப்பு மற்றும் விளம்பர செலவுகள் – பங்குகளை விற்பனை செய்ய Roadshow நடத்துதல், சந்தை ஆய்வு செய்வது, முதலீட்டாளர்களை ஈர்க்க விளம்பரங்கள் போடுதல் போன்ற செலவுகளை வணிக வங்கியாளர்களே மேற்கொள்ள வேண்டும்.
  2. சந்தை ஆய்வு மற்றும் தரவுகளை தொகுத்தல் – பங்குகள் குறித்த சந்தை நிலைபேற்ற அறிக்கைகள் தயாரித்தல், முதலீட்டாளர்களை பற்றிய தகவல்களை சேகரித்தல் போன்ற பணிகளுக்கான செலவுகளை வணிக வங்கியாளர்கள் ஏற்க வேண்டும்.
  3. பங்குகளை விற்பனை செய்ய தேவையான சட்ட ஆலோசனை செலவுகள் – ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றுவதற்காக சட்ட ஆலோசகர்களை நியமித்தல் மற்றும் தேவையான ஆவணங்களை தயாரிக்க உதவுதல்.
  4. முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளுக்கான செலவுகள் – முதலீட்டாளர்களை சந்தித்து, பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்காக ஏற்படும் செலவுகள்.

அரசு வழங்கும் ஆதரவு

  1. அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் பயண செலவுகள் – DIPAM மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கு விற்பனை தொடர்பாக நடத்தும் உத்தியோகபூர்வ சந்திப்புகளுக்கான பயண செலவுகளை அரசு ஏற்கும்.
  2. அரசு அதிகாரிகளின் தங்குமிட செலவுகள் – முதலீட்டாளர்களை சந்திக்க அரசின் முக்கிய அதிகாரிகள் சென்றால், அவர்களின் தங்குமிட செலவுகளை அரசு ஏற்கும்.
  3. பங்குகள் விற்பனை தொடர்பான உத்தியோகபூர்வ அனுமதிகள் மற்றும் ஒழுங்குமுறை ஆதரவு – SEBI, RBI, IRDAI மற்றும் பங்குச் சந்தை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தேவையான அனுமதிகளை அரசு வழங்கும்.
  4. அரசு ஆதரவு மற்றும் ஆலோசனை – வணிக வங்கியாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி, பங்கு விற்பனை செயல்முறையை எளிதாக்க அரசு உதவி செய்யும்.

அதாவது, மொத்த செலவுகளின் பெரும்பகுதியை வணிக வங்கியாளர்களே ஏற்க வேண்டும், ஆனால் அரசு அதிகாரிகளின் பயணம், தங்குமிடம் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் போன்ற விஷயங்களில் அரசு ஆதரவை வழங்கும்.

இந்த வேலைவாய்ப்பை முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்களின் மேலாண்மைத் துறை (Department of Investment and Public Asset Management - DIPAM) அறிவித்துள்ளது.

DIPAM என்பது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை ஆகும். இது அரசு உரிமையுள்ள நிறுவனங்களில் (PSUs) உள்ள பங்குகளை தனியார்மயமாக்குதல், மூலதன ஈடுபாடு, மற்றும் பொதுச் சொத்துக்களின் மேலாண்மை போன்ற பொறுப்புகளை மேற்கொள்கிறது.

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு, அரசு சொந்த வங்கிகளின் (Public Sector Banks - PSBs) மற்றும் பட்டியலிடப்பட்ட நிதி நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய வணிக வங்கியாளர்களை (Merchant Bankers) பணியமர்த்துவதற்காக DIPAM வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:DIPAMMinistry of FinancePSBPSBsPublic sector banks10 Commercial Banks