தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

தனியாருக்கு பங்குகளை விற்கும் முடிவில் 3 பொதுத்துறை வங்கிகள்? வெளியான புதிய தகவல்!

பொதுத்துறை வங்கிகள் வரும் நிதியாண்டில் தங்கள் பங்குகளை தனியாருக்கு விற்று அதன் மூலம் தங்கள் மூலதனத்தை திரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 12, 2025

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளில் யூகோ வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை அடுத்த நிதியாண்டில் மற்ற நிதி நிறுவனங்களுக்கு தங்கள் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளன என்றும்,இதன் மூலம் மூலதனத்தை திரட்டவும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச பொது பங்குதாரர் (MPS) விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படவும் உள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த வங்கிகளில் தற்போது அரசாங்கத்திடம் 95 சதவீதம் வரையிலான பங்குகளை வைத்திருக்கிறது. மீதமுள்ள பங்குகள் பொது முதலீட்டாளர்களிடம் உள்ளன. இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி (SEBI) விதிமுறைகளின்படி பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் 25 சதவீத பொது பங்குகளை வைத்திருக்க வேண்டும்.

சந்தை நிலவரங்களைப் பொறுத்து, தங்கள் ஒழுங்குமுறை தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்வதற்காக, மேற்குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகள் அடுத்த நிதியாண்டில் (FY26) QIP நடத்தி அதன் மூலம் அதிக தொகை கோரும் நிதி நிறுவனங்களுக்கு பங்குகளை விற்க வாய்ப்புள்ளது என்று தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகள் பங்கு விற்பது குறித்து ஆராய்வதற்கும், அவர்களின் சந்தை சலுகைகளை மூலோபாய ரீதியாக நிர்ணயிப்பதற்கும் அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றும் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பங்குகள் விற்பனை நடைபெறலாம் என்று தனியார் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பொதுத்துறை வங்கிகள் கொண்டுள்ள அரசு பங்குகள் : 

  • பாரத ஸ்டேட் வங்கி (SBI) - 57.51%.
  • பாங்க் ஆஃப் பரோடா (BOB) - 63.97%
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (UBI) – 74.76%
  • பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) - 70.08%
  • கனரா வங்கி (Canara Bank) - 62.93%
  • பஞ்சாப் & சிந்து வங்கி (P&SB) - 98.25%
  • இந்தியன் வங்கி (Indian Bank) – 73.84%
  • பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BOM) - 86.46%
  • பாங்க் ஆஃப் இந்தியா (BOI) - 73.38%
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI) – 93.08%
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) – 96.38%
  • யூகோ வங்கி (UCO Bank) - 95.39%

 

Tags:UCO BankIndianOverseasBankPunjabSindBankSEBI