- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கனரா வங்கிக்கு அபராதம் விதித்த RBI! காரணம் என்ன தெரியுமா?
பல முக்கிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதற்கான காரணத்தால் ரிசர்வ் வங்கி, கனரா வங்கிக்கு அபராதம் விதித்தித்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 28, 2025
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கனரா வங்கிக்கு ரூ.1,63,60,000 அபராதம் விதித்துள்ளது. இதற்குக் காரணம், முக்கியமான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாதது எனக் கூறப்படுகிறது .இந்த விவரம் பற்றி முழுமையான தகவலை நாம் இந்த பதிவில் காணலாம்.
அபராதம் விதிக்கப்பட்ட காரணம் என்ன?
RBI தனது 2023 கண்காணிப்பு மதிப்பீட்டு ஆய்வின் (ISE 2023) போது, மார்ச் 31, 2023 நிலவரப்படி கனரா வங்கியின் நிதி நிலையை மதிப்பீடு செய்தது. இந்த ஆய்வில் வங்கியால் பல விதிமுறைகள் மீறப்பட்டதை கண்டறிந்தது. எனவே இதன் காரணமாக தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, RBI, கனரா வங்கிக்கு விதிமீறல்கள் குறித்து விளக்கம் கேடடு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கியின் எழுத்து பதில்கள், கூடுதல் ஆவணங்கள் மற்றும் நேரடி விசாரணைகளின் பின்னர், சில விதிமுறைகளை வங்கி மீறியிருப்பது கண்டறியப்பட்டது.
என்னென்ன விதிமுறைகள் மீறப்பட்டது?
சிறிய கடன்கள் : ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு முரணாக, ரூ.25,000 வரையிலான சில சிறிய கடன்களுக்கு வங்கி கட்டணம் வசூலித்தது.
சேமிப்புக் கணக்கு வட்டி : சில சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளுக்கு வங்கி வட்டி செலுத்தத் தவறியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதிகளை மீறிய செயலாகும்.
நகல் கணக்குகள் : வங்கி வாடிக்கையாளர்களுக்கு, சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகள் மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகள் என இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்திருக்க அனுமதித்தது. இதுவும் RBI நிதி சேர்க்கும் விதிமுறைகளை மீறுகிறது.
சட்டபடி எடுக்கப்பட்ட நடவடிக்கை
இந்த விதிமுறைகளை மீறிய காரணத்தால் மேற்குறிப்பிட்ட அபராத தொகை கனரா வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அபராதம், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன் பிரிவு 47A(1)(c), 46(4)(i), மற்றும் 51(1) ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது. இது வங்கியின் ஒழுங்குமுறை குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே எனவும், வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான எந்த நடவடிக்கையையோ ஒப்பந்தங்களையோ இது பாதிக்காது எனவும் RBI தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, வங்கிகள் RBI விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும், குறிப்பாக வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது. இது கனரா வங்கிக்கு ஒரு பாடமாகவும், அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு நினைவுப்பொருளாகவும் உள்ளது.