தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / உலகம்

"மீண்டும் வங்கதேச பிரதமராகும் ஷேக் ஹசீனா ... இந்தியாவுக்கு நன்றி"- அவாமி லீக் கூறுவதென்ன?

ஷேக் ஹசீனா விரைவில் வங்காளதேசத்திற்கு பிரதமராக திரும்புவார் என்று அவாமி லீக் தலைவர் ரப்பி ஆலம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News Image

Author: Gowtham

Published: March 13, 2025

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உதவியாளரும், அவாமி லீக்கின் துணைத் தலைவருமான டாக்டர் ரப்பி ஆலம் ஷேக் ஹசீனா விரைவில் வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்பார் என்று கூறியுள்ளார்.

இதனுடன், ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பான புகலிடத்தையும் பயண வழியையும் வழங்கியதற்காக இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்தார். வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்த்தோடு, இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது, வங்கதேசம் கடுமையான அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில் இவ்வாறு கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செய்தி நிறுவனமான ANI-க்கு பேட்டி அளித்த ரப்பி ஆலம்,"ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்பார். இளம் தலைமுறையினர் தவறு செய்துள்ளனர், ஆனால் அது அவர்களின் தவறல்ல, அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.

வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கவலை தெரிவித்த அவர்,"தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது" என்று விவரித்தார். வங்காளதேசம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, சர்வதேச சமூகம் இதில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கிளர்ச்சி பரவாயில்லை, ஆனால் வங்காளதேசத்தில் அது நடப்பதில்லை. இது ஒரு பயங்கரவாத கிளர்ச்சி" என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர் இயக்கம் போராட்டம் வெடித்தது. இதன் பின்னர் அந்த இயக்கம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுத்தது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்யுமாறு கோரினர் அப்போது ஷேக் ஹசீனா ராஜினாமாசெய்யவில்லை. பின்னர், நாடு முழுவதும் வன்முறை போராட்டம் வெடித்து. நாளடைவில் தலைநகர் டாக்காவுக்குள் நுழைந்த பிறகு மாணவர்கள் இயக்கம் போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறை எழுச்சியைத் தொடர்ந்து, ஹசீனா வங்காளதேசத்தை விட்டு வெளியேறி ஆகஸ்ட் 2024 இல் இந்தியாவிற்குள் நுழைந்தார். அவர் இந்திய ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டார். இந்தியா அவருக்கு அவசரகால தஞ்சம் வழங்கியது, அன்றிலிருந்து அவர் டெல்லியில் ஒரு ரகசிய இடத்தில் வசித்து வருகிறார்.

ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை என்று வங்கதேச அரசு சமீபத்தில் கூறியது.  அப்போதிருந்து இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் நன்றாக இல்லை.  

இதற்கிடையில், யூனுஸ் அரசாங்கம் ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ரப்பி ஆலம் அளித்த இந்த புதிய தகவலால் வரும் நாட்களில், ஹசீனாவின் வருகை மற்றும் வங்கதேசத்தில் என்ன நடக்க போகிறது என்று காத்திருந்து பார்க்கலாம். 
 

Tags:BangladeshRabbi AlamPrime MinisterSheikh Hasina