- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பொதுத்துறை வங்கிகளில் உள்ள அரசு பங்குகளை குறைக்க மத்திய அரசு திட்டம்? விவரம் இதோ…
IOB, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, UCO வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் & சிந்து பாங்க் ஆகிய 5 பொதுத்துறை வங்கிகளில் (PSBs) உள்ள தங்கள் பங்குகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 27, 2025
மத்திய அரசு, SEBI விதிகளின்படி, ஐந்து பொதுத்துறை வங்கிகளில் உள்ள தங்கள் சொந்த பங்குகளை, Offer for Sale (OFS) மற்றும் Qualified Institutional Placement (QIP) முறைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் வங்கிகள் தனியார் முதலீட்டை ஈர்க்கவும், பங்குச் சந்தையில் போட்டியை அதிகரிக்கவும், அரசுக்கு வருவாய் ஏற்படுத்தவும் உதவவுள்ளது எனக் கூறப்படுகிறது. எதற்காக இந்த நடவடிக்கை இதுவரை அந்த 5 வங்கிகள் எவ்வளவு பங்கு தொகை வைத்துள்ளது என்பது பற்றி இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.
எதற்கு இந்த முடிவு?
இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் குறைந்தபட்சம் 25% பங்குகளை பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும் என்ற விடுமுறை உள்ளது.
ஆனால், பொதுத்துறை வங்கிகள் இந்த விதிமுறையில் இருந்து ஆகஸ்ட் 2026 வரை விலக்கு பெற்றிருந்தன. தற்போது, மத்திய அரசு பல வங்கிகளில் 75%-க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதால், அவற்றை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்குச் அதிகம் உள்ள வங்கிகள்:
1. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா – 86.46%
2. இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் – 96.38%
3. யூகோ பாங்க் – 95.39%
4. சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா – 93.08%
5. பஞ்சாப் & சிந்து பாங்க் – 98.25%
இந்த வங்கிகளில் மத்திய அரசின் பங்கு தொகை அதிகம் உள்ளதால், அவற்றை குறைக்காமல் இருக்க முடியாது என்பதால் பங்குகளை விற்பனை செய்வதற்காக OFS, QIP எனும் இரண்டு முக்கியமான முறைகளை மத்திய அரசு பயன்படுத்தும்.
1. Offer for Sale (OFS) – பங்குகளை நேரடியாக விற்பனை செய்யும் முறை
இந்த முறையில், அரசு நேரடியாக வங்கிகளின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும். பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் பணம் முற்றிலும் அரசுக்கே செல்கிறது. இது குறுகிய காலத்திலேயே பங்குகளை குறைக்கும் ஒரு நேரடி வழியாகும். அரசுக்கு உடனடி வருவாய் கிடைக்க இது உதவும்.
2. Qualified Institutional Placement (QIP) – நிறுவனங்களுக்கு பங்கு வழங்கும் முறை
இந்த முறையில், வங்கிகள் புதிதாக பங்குகளை வெளியிட்டு முதலீட்டை பெறுகின்றன. இதில் பெறப்படும் முதலீடு வங்கிகளுக்கே பயன்படும் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும். வங்கிகளின் நிதி நிலையை வலுவாக்க இந்த முறை உதவும்.
மத்திய அரசு OFS முறையை அதிகம் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில், தற்போது பொதுத்துறை வங்கிகள் நிதி நிலையற்ற நிலையில் உள்ளன. முந்தைய கால கட்டங்களில் வங்கிகள் பெற்ற முதலீடுகள்
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வங்கிகள் பெரும் அளவில் முதலீடுகளை பெற்றுள்ளன.
2024-25 நிதியாண்டில் (FY25) வங்கிகள் பெற்ற முதலீடு:
- பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா – ரூ.3,500 கோடி
- பஞ்சாப் நேஷனல் பாங்க் – ரூ.5,000 கோடி
- 2023-24 நிதியாண்டில் (FY24) வங்கிகள் பெற்ற முதலீடு:
- பாங்க் ஆஃப் இந்தியா – ரூ.4,500 கோடி
- பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா –ரூ.1,000 கோடி
- இந்தியன் பாங்க் – ரூ.4,000 கோடி
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா – ரூ.8,000 கோடி
கடந்த ஆண்டுகளில் QIP முறையை பயன்படுத்தி வங்கிகள் முதலீடுகளை பெற்றுள்ளன, ஆனால் OFS முறையில் அரசு எந்த பங்குகளையும் விற்பனை செய்யவில்லை.
அரசு பங்குகளை குறைப்பதன் காரணம்
கடந்த காலங்களில், குறிப்பாக Asset Quality Review (AQR) நடைமுறைக்கு பிறகு, வங்கிகள் நிதி நெருக்கடியில் இருந்தன. அந்த நேரத்தில், அரசு பெரும் அளவில் முதலீடு செய்து வங்கிகளை நிதிப் பற்றாக்குறையிலிருந்து மீட்டது. இப்போது, பல வங்கிகள் லாபகரமான நிலையில் உள்ளதால், அரசுக்கு தேவையானதை விட அதிகமாக பங்கு உரிமையும் உள்ளது.
தற்போதைய மதிப்பீட்டின்படி, ரூ.43,000 கோடிக்கு மேற்பட்ட பங்குகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் ஒரு பகுதி வங்கிகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும், மற்ற பகுதி பங்கு சந்தையில் விற்பனை செய்யப்படும்.
இதனால் வரும் விளைவுகள்
- வங்கிகள் தனியார் முதலீட்டாளர்களை அதிகம் ஈர்க்கும்.
- பங்குச் சந்தையில் போட்டி அதிகரிக்கும்.
- வங்கிகள் தங்கள் வளர்ச்சிக்காக கூடுதல் முதலீடுகளை பெறும்.
- மத்திய அரசு புதிய நிதியை உருவாக்கி, அதை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தும்.
- இது வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், அரசு பங்கு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவர வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பொதுத்துறை வங்கிகள் தனியார் முதலீட்டாளர்களின் பங்குகளை அதிகமாக கொண்டிருக்கும், மேலும் வங்கிகள் முழுமையாக வணிக முறையில் செயல்பட வழிவகுக்கும்.