Advertisement
ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்! பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியரின் கார் தீவைத்து எரிப்பு!
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) பணியாற்றும் ஓர் ஊழியரின் காரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 22, 2025
Advertisement
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் பணியாற்றும் ஊழியரின் கார் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை காணலாம்.
என்ன நடந்தது?
Advertisement
அந்த வங்கி ஊழியர் காலை நேரத்தில் வழக்கமாக கிளம்பி வேலை செய்வதற்காக வங்கிக்கு வருகை தந்திருக்கிறார். வருகை தந்துவிட்டு காரை வங்கி அருகே நிறுத்தி வைத்துவிட்டு வங்கிக்குள் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அதே நேரத்தில், அவரது காரை நோட்டமிட்ட வங்கியின் அருகே நின்று கொண்டிருந்தத சில மர்ம நபர்கள் முதலில் காரின் கண்ணாடிகளை உடைத்து, முதலில் வாகனத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.
பிறகு திடீரென கையில் காரை எரிப்பதற்காக கொண்டு வந்திருந்த பொருட்களை வைத்து காரை தீ வைத்து கொளுத்தினார்கள். பிறகு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வேகமாக ஓடி வந்த நிலையில், உடனடியாக அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.
அடுத்தடுத்த அதிர்ச்சி..,
உடனடியாக அந்த வங்கி ஊழியர் தனது கார் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க சென்றார். காவல்துறையிடம் புகார் அளிக்கும் சமயத்திலேயே மர்மநபர்கள், ஏற்கனவே பாதி எரிக்கப்பட்ட காரை தீ வைத்து எரித்தனர். இதில் முழுவதுமாகவே கார் தீக்கு இறையானதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் பின்னணி என்ன?
வங்கி ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதலா? அல்லது விபத்தா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வங்கி ஊழியரை அழைத்து உங்களுக்கு எதாவது தனிப்பட்ட பிரச்சனை இருந்ததா? என்பது குறித்தும் விசாரணை நடத்துகிறது. முதற்கட்டமாக, இது வங்கி தொடர்பான தாக்குதலா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் என்ன சொல்கிறார்கள்?
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி, “ இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவத்தின் போது அந்த ஏரியாவில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கேமரா காட்சிகள் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மர்மநபர்கள் யார்? அவர்கள் ஏன் இந்த தாக்குதலை நிகழ்த்தினார்கள்? என்பதற்கான விவரங்களை சேகரித்து வருகிறார்கள். வங்கி ஊழியர் முன்பு ஏதாவது துன்புறுத்தலுக்குள்ளானவரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் விவரமான தகவலை கொடுப்போம்” என தெரிவித்தனர்.
வங்கி ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா?
இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சனையை மீண்டும் முன்வைக்கிறது. ஏனென்றால் சமீபகாலமாக வங்கி ஊழியர்கள் பல விதமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, சமீபத்தில் கூட வேலை அழுத்தம் அதிகமாக இருப்பதாவும், தனிப்பட்ட விஷயங்களை செய்ய சொல்லி அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும வங்கி ஊழியர்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தது.
இப்போது அதனை மிஞ்சும் அளவுக்கு இப்படியான ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே வங்கியுடன் தொடர்புடையவர்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள், பொதுவெளி தாக்குதல்கள் நடப்பது என்பது அரிது. ஆனால், இந்த சம்பவம் வங்கி அதிகாரிகள், பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதைக் எடுத்து காட்டுகிறது. போலீசார் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments yet.