தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / உலகம்

சீனா, மெக்சிகோ, கனடாவுக்கு கூடுதல் வரி விதித்த டிரம்ப்! இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்பு?

அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதால் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

News Image

Author: Bala Murugan K

Published: March 4, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% சுங்க வரியை விதிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த முடிவால் வட அமெரிக்காவில் உள்ள இரு பெரிய வர்த்தக கூட்டாளிகளுக்கு இடையே பெரும் வர்த்தக தாக்கம் ஏற்படும் என்பதால், இது முடிவற்ற வர்த்தக போர் உருவாகும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவரமாக இந்த பதிவில் பார்ப்போம்..

டிரம்பின் அறிவிப்பு

டொனால்ட் டிரம்ப், தனது மார்ச் 4, 2025 அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இந்த தகவலை வெளியிட்டார். அவருடைய ஆட்சியில் அமெரிக்காவின் உள்நாட்டு தொழில்கள் பாதுகாக்கப்படும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்கவும், வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கவும் இதை முன்னெடுக்கிறார் என்று அவர் வலியுறுத்தினார்.

முக்கிய காரணங்கள்

1. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு:

மெக்சிகோ மற்றும் கனடாவின் மூலம் அமெரிக்காவுக்கு ஃபென்டனில் (Fentanyl) போன்ற ஆபத்தான போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக டிரம்ப் குற்றம்சாட்டுகிறார். இந்த கடத்தலை தடுக்க மெக்சிகோ மற்றும் கனடா போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதற்காக, அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக சுங்க வரி விதிக்கப்படுவதாக கூறினார்.

2. அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும் திட்டம்:

அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, வெளிநாட்டிலிருந்து வரும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். "இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்க உள்நாட்டு பொருளாதாரம் வலுப்பெறும்" என்று அவர் தெரிவித்தார்.

3.சீனாவை கட்டுப்படுத்தும் திட்டம்:

சீனாவின் மலிவான விலையில் உற்பத்தி அதிபடுத்துதல் மற்றும் அமெரிக்க சந்தையில் அதன் ஆதிக்கம் அதிகரித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் 10% வரி விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிய சுங்க வரியின் தாக்கம் – யார் பாதிக்கப்படுவார்கள்?

1. கனடா மற்றும் மெக்சிகோ:

கனடா மற்றும் மெக்சிகோவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்கா, இரண்டு நாடுகளிலிருந்தும் ஆண்டுக்கு 600 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது. 25% வரி விதிக்கப்பட்டால், அமெரிக்க நிறுவனங்கள் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து பொருட்கள் வாங்குவதை குறைக்கும். இதன் காரணமாக, கனடா & மெக்சிகோவின் தொழில்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தித் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே சனயன் உணவுப்பொருட்கள், சிறிய வகை உற்பத்தி பொருட்கள், மெஷின்கள் போன்ற பொருட்கள் விலையேற்றத்தை சந்திக்கலாம்.

கனடாவில் வாகன உற்பத்தி, எரிசக்தி, உலோக உற்பத்தி ஆகிய துறைகள் பாதிக்கப்படும். மெக்சிகோவில் சிறிய தொழில்கள், உணவு உற்பத்தி, மெஷின்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நஷ்டமடையும். இதன் காரணமாக, இரு நாடுகளிலும் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகள் இழக்கப்படலாம்.

2. அமெரிக்க நிறுவனங்கள்:

கனடா & மெக்சிகோவை நம்பி பொருட்கள் இறக்குமதி செய்யும் அமெரிக்க வணிக நிறுவனங்கள், அதிக சுங்க வரி செலுத்த வேண்டியதால், அமெரிக்காவில் பொருட்களின் விலையும் உயரும். குறிப்பாக, வாகனங்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள் போன்றவைகளின் விலை அதிகரிக்கும்.

பல அமெரிக்க கம்பெனிகள் மெக்சிகோவிலுள்ள தொழிற்சாலைகளை நம்பியுள்ளன (Foxconn, Ford, GM போன்றவை). மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்வது மிகுந்த செலவாகும், இதனால் கம்பெனிகள் மூடப்படக்கூட வாய்ப்புகள் ஏற்படலாம். 

3. உலகளாவிய பொருளாதாரம்:

இந்த முடிவால் உலகளாவிய பொருளாதாரத்தில் ஒரு புதிய மந்தநிலை (Recession) ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

 இந்தியாவுக்கு ஏற்படும் தாக்கம்? 

இந்தியாவின் ஏற்றுமதி & இறக்குமதி விலையில் மாற்றம் ஏற்படலாம். இந்தியா அமெரிக்கா, கனடா, மெக்சிகோவிலிருந்து பல பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்நாடுகளில் உள்ள பொருளாதார மாற்றங்கள் இந்தியாவையும் பாதிக்கும். அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறையலாம் அமெரிக்கா பொருளாதார சரிவை சந்தித்தால், இந்தியாவில் உள்ள ஐடி மற்றும் தொழில்துறைக்கு வேலை வாய்ப்பு குறையலாம். இந்தியாவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகலாம். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இடையேயான உறவுகள் மோசமடைந்தால், இந்தியா புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க முடிவால் அப்செட்

அமெரிக்கா அறிவித்த இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அப்செட்டில் ஆழ்த்தியள்ளது. எனவே, பலரும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள். 

கனடா:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டிரம்பின் அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். அவர், "அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வட அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பை பாதிக்கும். கனடாவின் நலன்களைப் பாதுகாக்க, அமெரிக்காவுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டோம்" என்று தெரிவித்தார். 

மெக்சிகோவின் பதில்:

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், "அமெரிக்காவின் இந்த முடிவு உண்மையில் சொல்லவேண்டும் என்றால் நியாயமற்ற ஒரு விஷயம். ஏனென்றால், போதைப்பொருள் கடத்தலை தடுக்க, அமெரிக்காவே தனது நாட்டிற்குள் எளிதாக போதைப்பொருள் கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அதை செய்யாமல், பிறர் மீது பழி போடுவது என்பது அநியாயம்" என்று கண்டனம் தெரிவித்தார். 

சீனாவின் பதில்:

சீன அரசு, டிரம்பின் அறிவிப்பை "சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கை" என்று கடுமையாக கண்டித்துள்ளது. அவர்கள், "இந்த நடவடிக்கை உலக பொருளாதாரத்தை பாதிக்கும். அமெரிக்காவின் இந்த முடிவு உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும். எனவே இந்த நேரத்தில் நாங்கள் சொல்லிக்கொள்ளும் விஷயம் ஒன்று தான்  சீனா, தனது நலன்களைப் பாதுகாக்க எந்த விதமான தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றாலும் எடுக்க தயாராக இருக்கிறது " என்று தெரிவித்துள்ளது.

மேலும், டிரம்ப் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் மேலும் கடுமையாகும் என்பது இந்த அறிவிப்பால் உறுதியாகி உள்ளது. கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் வர்த்தக உறவுகள் மோசமடையலாம். இது உலகளாவிய பொருளாதாரத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த புதிய சுங்க வரிகளின் விளைவுகள் வெறும் அமெரிக்கா மட்டுமல்ல, உலகளாவிய அளவிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், இதன் தாக்கம் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

Tags:MexicoCanadaDonald TrumpChinaModi