- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
KYC விவகாரம்., வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக் கூடாது! RBI ஆளுநர் கூறியது என்ன?
KYC ஆவணங்களைக் கேட்டு வாடிக்கையாளர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.

Author: Gowtham
Published: March 19, 2025
பொதுமக்கள் வங்கிக்கு செல்லும் போது பல்வேறு சமயங்களில் KYC ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அல்லது KYC ஆவணங்களை எடுத்து வருமாறு சில வங்கி ஊழியர்கள் கூறுவதுண்டு. KYCஆவணங்களான ஆதார், பான் கார்டு உள்ளிட்டவை கேட்கப்படும். வாடிக்கையாளர்கள் ஏற்கனவே KYC ஆவணங்களை கொடுத்திருந்தாலும், மீண்டும் சில வங்கி ஊழியர்கள் கொண்டுவருமாறு சொல்வார்கள்.
இதனை பலரும் சமூக வலைதளங்களில் புலம்பியதும் உண்டு. அந்த செய்திகள் ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் பார்வைக்கே சென்று விட்டது போல, இந்த விவகாரம் தொடர்பாக, ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "KYC ஆவணங்களுக்காக வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம்" என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதை 'தேவையற்ற சிரமம்' என்று கூறிய அவர், ஒரு வாடிக்கையாளர் ஒரு முறை ஆவணங்களை நிதி நிறுவனத்தில் சமர்ப்பித்திருந்தால், மீண்டும் அவற்றைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்றார்
இவ்வாறு KYC ஆவணங்களை திரும்ப, திரும்பக் கேட்டு வாடிக்கையாளர் புகார்கள் சில காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில், KYC-ஐ மீண்டும் மீண்டும் புதுப்பிப்பதில் உள்ள சிக்கல் குறித்து மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
மும்பையில் நடைபெற்ற RBI குறைதீர்ப்பாளரின் வருடாந்திர கூட்டத்தில் இது பற்றி விவாதித்த ஆர்பிய் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "ஒரு மைய தரவுத்தளத்தின் உதவியுடன், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் கிடைக்கச் செய்ய முடியும் என்று அறிவுரை கூறினார். அதாவது, மத்திய தரவுத்தளத்தில் (Central Database) ஏற்கனவே உள்ள தகவல்களைப் பயன்படுத்தி KYC செயல்முறையை எளிதாக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஆனால், பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFCகள் இந்த வசதியை இன்னும் முறையாகப் பயன்படுத்தவில்லை. இது இத்தொடர்பாக வங்கிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதோடு, பெரும்பாலான வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் கிளைகள் அல்லது அலுவலகங்களுக்கு மத்திய தரவுத்தளத்திலிருந்து தகவல்களைப் பெறுவதற்கான வசதியை வழங்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
2023-24 நிதியாண்டில், வங்கிகள் சுமார் ஒரு கோடி புகார்களைப் பெற்றன. மற்ற நிதி நிறுவனங்களையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். இவற்றில் 57% வழக்குகளில், ரிசர்வ் வங்கி குறைதீர்ப்பாளரின் தலையீடு தேவைப்பட்டது, இது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது.
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவுறுத்தினார். வங்கிகளின் உயர் அதிகாரிகள் முதல் கிளை மேலாளர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் புகார்களைக் கேட்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.