தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / உலகம்

விண்வெளி வீரர்கள் விண்ணில் வைத்து என்ன சாப்பிடுவார்கள்? சீக்ரெட் தகவல் இதோ!

விண்வெளி வீரர்கள் விண்ணில் என்னென்ன சாப்பிடுவார்கள் எத்தனை முறை சாப்பிடுவார்கள் என்பது பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

News Image

Author: Bala Murugan K

Published: March 18, 2025

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியிருந்த நிலையில், அவர்கள் நாளை பூமியில் தரையிறங்கவுள்ளனர்.  நாசா உடன் இணைந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து புளோரிடாவில் இருந்து க்ரூ டிராகன் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், அதன் மூலம் அவர்கள் பூமிக்கு திரும்புகிறார்கள். 

இந்த சூழலில் அவர்களுடைய சம்பள விவரங்கள் மற்றும் அவர்கள் பூமிக்கு வந்த பிறகு என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என்பது பற்றிய கேள்விகளும் எழுந்து கொண்டு இருக்க அதற்கு பதில் குறித்த தகவலும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் 

விண்வெளியில் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, விண்வெளிக்கு செல்பவர்கள் என்ன சாப்பிடுவார்கள் என்பது பற்றிய கேள்வியும் எழுந்தது… எனவே, அந்த கேள்விக்கு விரிவான விளக்கமான பதில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் விண்வெளி வீரர்கள் மற்றும் நிபுணர்கள் கூறிய விஷயங்களை வைத்து இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, விரிவாக பார்ப்போம்...

விண்வெளியில் உணவு சமைக்கலாமா? 

விண்வெளியில், உணவு சமைக்கலாமா? என்று கேட்டால் அதற்கு பதில் சமைக்கலாம் என்று தான் சொல்லவேண்டும் என நிப்பினர்கள் குறுகிறார்கள்.  ஆனால், அங்கு பூமியில் போல உணவு சமைப்பது எளிதல்ல. அங்கு எடையின்மை (Microgravity) நிலவுவதால், சுண்ணாம்பு தூள் போல உணவுப் பொருட்கள் மிதந்து போக வாய்ப்பு உள்ளது. எனவே, உணவுகளை முன்கூட்டியே தயாரித்து,  கற்று போகாத அளவுக்கு மூடிய பாக்கெட்டுகளில் வைக்கிறார்கள். அதிலும் சில உணவுகள் இருக்கிறது அது என்னவென்றால்.., 

உலர்த்தப்பட்ட உணவுகள் – நீர் சேர்த்து சாப்பிடக் கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, கஞ்சி, சாதம், கட்டிய பருப்பு உணவுகள் இவை வெறும் தோல் உரித்தால் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள். இதில், சாண்ட்விச்ச்கள், கிரேக்கர்கள் போன்றவை இதில் அடங்கும். விண்வெளியில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு எடுத்துக்கொள்வார்கள்.அதிலும் சுனிதா வில்லியம்ஸ் எடுத்துக்கொள்ளும் உணவு முறை வித்தியாசமானதாக இருக்கும். 

  • காலை உணவு – ஓட்ஸ், ப்ரொட்டீன் பார்கள், பழச் சாறுகள்
  • மதிய உணவு – டோர்டில்லா ரொட்டி, முட்டை, துண்டு செய்யப்பட்ட இறைச்சி
  • இரவு – சப்பாத்தி, உலர்த்தப்பட்ட கறிகள், 
  • இடைவேளை – புரோட்டீன் ஷேக், பீனட் பட்டர்

உணவு எப்படி அனுப்பப்பட்டது?

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் இருந்த வீரர்கள் விண்வெளிக்கு செல்லும் முன், அவர்களுக்குத் தேவையான உணவுகள் சரியாக திட்டமிடப்பட்டு அனுப்பப்படும். சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) பூமியிலிருந்து வெறும் 400 கி.மீ தொலைவில் உள்ளதால், அவ்வப்போது தேவையான பொருட்களை அனுப்புவது சாத்தியமாக இருக்கிறது. NASA, Roscosmos (ரஷ்ய விண்வெளி நிறுவனம்), ESA (யூரோப்பிய விண்வெளி நிறுவனம்) போன்றவை Progress, Dragon, Cygnus, HTV போன்ற கார்கோ (cargo) விண்கலங்களை பயன்படுத்தி உணவுப் பொருட்களை அனுப்புகின்றன.

தண்ணீர் எப்படி குடிக்கிறார்கள்?

விண்வெளியில் தண்ணீர் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும். அங்கு தண்ணீரை வழக்கமாக குடிப்பது போல பருக முடியாது, அதனால், நீரைக் குடிக்க ஸ்ட்ரா இணைக்கப்பட்ட சிறப்பு பைகளில் கொடுக்கிறார்கள். மேலும், வியர்வை, மூச்சுக் காற்று போன்றவற்றிலிருந்து நீரை திருப்பிப் பயன்படுத்தும் வசதியும் இருக்குமாம். 

உணவு தொடர்பான சவால்கள்

ஒரே மாதிரி விண்வெளியில் உணவுப் பழக்க வழக்கங்கள் என்பது இருக்காது. அடிக்கடி உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதற்கான முக்கிய காரணங்களும் சில இருக்கிறது. 

  • சுவை உணர்வு மாறுதல் – எடையின்மையின் காரணமாக நாக்கின் சுவை மாறுவதால் உணவுகள் சாதாரணமாக இருக்கும் போலவே தெரியாது.
  • மலச்சிக்கல் மற்றும் ஜீரண பிரச்சனைகள் – நுண்ணுயிர் (Microbiome) நிலை மாற்றமாவதால் ஜீரணப் பிரச்சனைகள் ஏற்படும்.
  • சாப்பிடும் முறையில் கட்டுப்பாடு – உணவு மற்றும் நீரின் அளவை கட்டுப்படுத்தி பருக வேண்டும்.

முன்னாள் விண்வெளி வீரர்களின் அனுபவம்

முன்னாள் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் உணவின் முக்கியத்துவம் பற்றிப் பேசினர்., ஒரு வருடம் விண்வெளிக்கு சென்று திரும்பிய கொண்ட , ஸ்காட் கெல்லி இதைப்பற்றி கூறும்போது "விண்வெளியில் உணவின் சுவை குறைந்துபோகும். நாங்கள் மிளகாய் சாஸ், மஸ்தர்ட் போன்றவை சேர்த்து சாப்பிடுவோம்.அப்போது தான் கொஞ்சமாவது சுவை தெரியும் என்கிற காரணத்தால் இப்படி சாப்பிடுவோம்” என தெரிவித்தார். 

அவரை தொடர்ந்து NASA-வின் உணவியல் விஞ்ஞானி ராக்கோ பெசா இதை மேலும் விளக்கி பேசுகையில் “  "உணவை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். கனிமச்சத்துக்கள் குறைந்தால், எலும்புகளின் அடர்த்தி குறையும்.நாம் அங்கு உணவை எந்த அளவுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது" என தெரிவித்தார். 

மேலும், ISS-ல் பணியாற்றிய பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் விண்வெளி வீரர்கள் இதைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். NASA-வின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். 

 

Tags:sunita williams food in spacesunita williams foodSunita WilliamsSpaceX Crew-10SpaceX