தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / உலகம்

வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? டிரம்ப் - ஜெலன்ஸ்கி வாக்குவாதம்.., உக்ரைன் அதிபர் வெளிநடப்பு?

அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசியதால், வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறியுள்ளார்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: March 1, 2025

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முகத்திற்கு நேராகவே கடுமையாக விமர்சித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் குறித்து பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, அமெரிக்காவை ஜெலன்ஸ்கி அவமதித்துவிட்டதாக ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.  

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தாங்கள் சொல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அமெரிக்கா ஆதரவை இழக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடந்தது என்ன ?

ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு 3 ஆண்டுகளாக அமெரிக்கா செய்த நிதியுதவிக்கு பதிலாக, உக்ரைனில் உள்ள அரியவகை கனிம வளங்களின் உரிமையை காலவரையில்லாமல் வழங்க ட்ரம்ப் கேட்டுள்ளார். இதையடுத்து, போரில் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார் என ஸெலன்ஸ்கி தெரிவிக்க, உத்தரவாதம் அளிக்க ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும், மதிய உணவை புறக்கணித்தும் ஸெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். ஸெலன்ஸ்கி அமைதியை மீட்க தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாக உள்ளது. மீண்டும் நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன் என ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் கடும் சாடல் 

நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள்.போரில் நீங்கள் வெல்லவில்லை. நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள். 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள்.

அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும். அமெரிக்காவின் ஆயுதங்கள் இல்லாவிடில் இரண்டே வாரங்களில் ரஷ்யாவிடம் உக்ரைன் தோற்றிருக்கும் என்று டிரம்ப் கூறினார். மேலும், நீங்கள் 3ஆம் உலகப் போரைத் தொடங்குவது போல செயல்பட்டு, பல லட்சம் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் கடுமையாக சாடினார். 

இதையடுத்து, ஆத்திரமடைந்த ஜெலன்ஸ்கி, பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும், வெள்ளை மாளிகையின் விருந்தையும் புறக்கணித்து வெளியேறினார். 

ஜெலன்ஸ்கி: 

இதே போன்ற போர் நிறுத்த ஒப்பந்தங்கள் முன்பும் புதின் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால், மீண்டும் உக்ரைனை தாக்கினார். புதின் அவற்றை மதிப்பதில்லை. மீண்டும் அதையே நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? 

அமெரிக்க துணைத் அதிபர் ஜே.டி.வான்ஸ் :  

இந்த சந்திப்பின் போது ட்ரம்ப் உடனிருந்த துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் , 'ஜெலென்ஸ்கி "நன்றி" சொல்லாதது ஜனாதிபதி டிரம்பை அவமதித்ததாக கூறினார். "நான் பலமுறை அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறேன்" என்று ஜெலென்ஸ்கி தனது குரலை உயர்த்தி பதிலளித்தார்.

நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி :  

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அமெரிக்க மக்களின் ஆதரவிற்கு நன்றி, இந்த வருகைக்கு நன்றி. அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்றி. உக்ரைனுக்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதி தேவை, நாங்கள் அந்த திசையில் செயல்படுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:Trump Zelensky MeetingRussia Ukraine WarZelenskyDonald TrumpUkraine