- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
டிரம்ப் உடன் வெடித்த மோதல்..."உங்கள் ஆதரவை மறக்கமாட்டோம்" நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி!
அமெரிக்காவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: March 3, 2025
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் என்பது நீண்டகாலமாக முடிவுக்கு வராமல் இருக்கும் பரபரப்பான விஷமாக இருந்து வருகிறது போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், போரை நிறுத்த தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அமைதி பேச்சுவார்த்தையும் நடந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ரஷ்யா - உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்க வேண்டிய அவசியமில்லை" என்று கருத்து தெரிவித்தார். அதன்பிறகு சவுதி அரேபியாவில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஜெலன்ஸ்கி, உக்ரைன் பங்கேற்காத அமைதி ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி திங்களன்று ஒரு வீடியோ வெளியிட்டு அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார. எதற்காக அவர் நன்றியை தெரிவித்தார்? என்ன நடந்தது என்பது குறித்து விவரமாக இந்த செய்தியில் பார்ப்போம்..
சந்திப்பு
உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான கனிம வள ஒப்பந்தம் மற்றும் உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடர்பான விஷயங்களை பற்றி பேசுவதற்காக நடத்தப்பட்டது.
இருவருடைய சந்திப்பின் போது ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக அந்த நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு இத்தனை ஆண்டுகள் என காலாவதி இல்லாமல் கொடுக்கவேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்காக தான் ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு வருகையும் தந்திருந்தார். ஆனால், சந்திப்பு நடந்து முடிந்த பிறகு அவர் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மோதல்
இவர்கள் இருவரும் சந்தித்தபோது ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவை கோரினார்.டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக அமெரிக்கா பெரும் செலவுகளை சந்திக்கிறது என்றும், ஜெலென்ஸ்கியின் நடவடிக்கைகள் உக்ரைனுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஜெலென்ஸ்கியும் கோபத்தோடு சென்றார்.
நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி
இதனையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என ட்ரம்பின் உயர்மட்ட அதிகாரிகள் அழுத்தமளிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இப்படியான சூழலில் ஜெலென்ஸ்கி தனது சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியீட்டு அதில், அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றியினை தெரிவித்தார்.வீடியோவில் பேசிய அவர் “ கடந்த நாட்களில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, ஐரோப்பாவில் உக்ரைனுக்கு உறுதியான ஆதரவு உள்ளது. மேலும், ஐக்கிய உணர்வும், ஒத்துழைக்க விருப்பமும் அதிகரித்துள்ளது. இது ஐரோப்பா முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷயம். இப்போது அனைவருமே ஒரு மனத்துடைய கருத்துக்களில் உள்ளனர். உண்மையான அமைதி நிலைக்க, உறுதியான பாதுகாப்பு உத்தரவுகள் இந்த நேரத்தில் தேவை.அதனை தான் நாம் இப்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.