தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Monday, Sep 8, 2025 | India

Advertisement

Home / தமிழ்நாடு

பொருப்பு டி.ஜி.பி நியமனம் - நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது

News Image

Author: Santhosh Raj KM

Published: September 2, 2025

Advertisement

தமிழக பொறுப்பு
டிஜிபி-யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முறையிட்ட போது தலைமை நிதிபதி மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்

தமிழகசட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றதை அடுத்து   சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் வரதராஜ் என்பவர் சார்பில், தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் முறையிட்டனர்

மனுதாரர் தரப்பில் முறையீடு செய்தது
தற்காலிக அடிப்படையில் டிஜிபி நியமிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்தது சட்டவிரோதம்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் உச்சநீதிமன்றத்தில் நிதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளார். டிஜிபி நியமனங்களுக்கு  பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தான் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:High CourtSupreme CourtVenkataramanLegal ChallengeContempt Of CourtDGPA ppointmentTamil Nadu PolicePrakash Singh GuidelinesLaw And OrderDGP Posting

No comments yet.

Leave a Comment