தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Monday, Sep 8, 2025 | India

Advertisement

Home / தமிழ்நாடு

துப்புரவு சேவைகளை தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்வதற்கான நிறுவனத்தின் முடிவு குறித்த புதுப்பிப்பு

தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News Image

Author: Santhosh Raj KM

Published: September 2, 2025

Advertisement

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு.

சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16-ந்தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில். , தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக்கோரி உழைப்போர் உரிமை இயக்கம்' சார்பில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற  வழக்கு தொடர்ந்தனர் அந்த வழக்கைத் நிதிபதி கே.சுரேந்தர் விசாரித்து "தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது எனவும், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தையே தொடர்ந்து வழங்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில்
"தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தொழிலாளர் நல நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

சென்னை மாநகராட்சி தரப்பில்
"உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை, தற்காலிகமாக தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ரூ.761 ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது," என கூறப்பட்டது

ஒப்பந்த நிறுவனம் தரப்பில்
"தனி நீதிபதி உத்தரவுக்குப் பிறகு 800 பணியாளர்கள் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல் முறையீடு செய்ததை அடுத்து அவர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால் 2,000 டன் குப்பைகள் தேங்கியுள்ளன. அதில் இருந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும். அதனால் தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும்," என்று கேட்டுக் கொள்ளப்பட்டது

நீதிபதிகள் உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை" எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 6 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Tags:Madras High courtLabour RightsProtestPublic Interest LitigationWorkers RightsLabour WelfareSanitation WorkersLegal News

No comments yet.

Leave a Comment