நாய்க்கடி விவகாரத்தைப் முன்னெடுத்த உச்சநீதிமன்றம்
நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

Author: Santhosh Raj KM
Published: July 28, 2025
நாடு முழுவதுமாக சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாய்க்கடியாள் ஏற்படும் ரேபிஸ் நோயால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. இதனால் ஏற்படும் உயிர் பலிகளும் அதிகரித்துவருவதால் உச்சநீதிமன்றம் இது தொடர்பான தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அதனை விசாரணைக்கு ஏற்றுகொண்டுள்ளது.
தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்தும் உரிய வழிகாட்டு நெறுமுறைகள் உத்தரவாக வழங்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
ஆதலால் வரும் காலங்களில் தெருநாய்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தெருநாய்கள் கடியில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள் இதன் மூலம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
அதே போல ரேபிஸ் நோயால் பதிக்கப்படக்கூடியவர்களுக்கு அவர்களுக்கு வழங்கக்கூடிய மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த விவகாரம் குறித்து நிதிபதி
அதிர்ச்சியான செய்திகளை பார்க்கிறோம்; தெருக்களில் திரியும் நாய்களால் சிறார்கள் பாதிக்கப்படுகின்றனர், ரேபிஸ் பரவுகிறது; இதனை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு பதிவு செய்கிறேன்; தலைமை நீதிபதி உரிய உத்தரவுகளை வழங்குவார் என நீதிபதி பர்திவாலா கூறினார்.
விரைவில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments yet.
