Advertisement
தானாக முன்வந்து விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணையம்
மடப்புரம் அஜித் வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது. நாளிதழில் வெ.ளியான செய்தியின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என தகவல்

Author: Santhosh Raj KM
Published: 20 hours ago
Advertisement
திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம்.
கடந்த ஜூன்.26ம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயிலான பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நிகிதா எனும் பெண், தனது வயதான தாய் சிவகாமியை அழைத்து வந்திருக்கிறார். நிகிதா தனது காரை நீறுத்த சொல்லி, கோயில் செக்யூரிட்டியாக இருந்த இளைஞர் அஜித் குமாரிடம் கூறியுள்ளார். ஆனால் தரிசனம் முடிந்து வந்து பார்த்தபோது காரில் இருந்த நகையை காணவில்லையாம். இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.
இந்த விசாரணையில் அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானார். இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காவல்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் அவரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கும் வீடியோவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவை சக்தீஸ்வரன் என்பவர் பதிவு செய்ததாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையான விசாரணை நடத்தி, வரும் 8-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டது அதனால் அஜித்குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
No comments yet.