- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பத்ரிநாத் பனிச்சரிவு : 57 சாலை தொழிலாளர்களின் நிலை என்ன?
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்திரிநாத் கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு சாலை கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பனிசரிவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Author: Kanal Tamil Desk
Published: February 28, 2025
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 55க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனா மற்றும் பத்ரிநாத் இடையானான எல்லைப்பகுதியில் மனாவை காஸ்டோலியுடன் இணைக்கும் மாநில தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்றன. அப்போது, இந்த பனிச்சரிவு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பனியில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) பணிபுரிந்து வந்துள்ளனர்.
தற்போது வெளியான தகவல்களின்படி, 10 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மனா அருகே உள்ள ராணுவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளதாக ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மற்றவர்கள் பனியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர் .
உத்தரகண்ட் காவல்துறை தலைமையக செய்தித் தொடர்பாளர் நிலேஷ் ஆனந்த் பர்னே ANI-யிடம் கூறுகையில், "மானாவின் எல்லைப் பகுதியில் சாலைகள் அமைக்கும் பனியின் போது ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த தொழிலாளர்களில் 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மனாவிற்கு அருகிலுள்ள ராணுவ முகாமுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்" என்று கூறினார். பனிச்சரிவில் சிக்கியது 57 தொழிலாளர்கள் என BRO (எல்லை சாலைகள் அமைப்பு) நிர்வாகப் பொறியாளர் CR மீனா ANIயிடம் உறுதிப்படுத்தினார்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், "சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் BROஆல் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளின் போது பல தொழிலாளர்கள் பனிச்சரிவில் புதைந்து போனதாக வரும் செய்திகள் வருத்தமளிக்கிறது. ITBP, BRO மற்றும் பிற மீட்புக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து தொழிலாளர் நலமுடன் இருக்க நான் பத்ரிநாதரை பிரார்த்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருவதால், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் SDRF குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு தற்போது சென்று மீட்புப்பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் அதிக உயரமுள்ள பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என வானிலை துறை முன்னதாக எச்சரிக்கை விடுத்து இருந்தது என கூறப்படுகிறது. அந்த எச்சரிக்கை வெளியான அடுத்த சில தினங்களில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.