தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Wednesday, May 14, 2025 | India
Home / இந்தியா

"Gen z தலைமுறைக்கு ரீல்ஸ்தான் தெரியுது.. கணக்கு தெரியல" - தனியார் நிறுவன CEO ஆதங்கம்.!

GEN Z தலைமுறைக்கு (டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்தவர்கள்) கணிதத்தை விட, ரீல்ஸ் தான் நன்றாக தெரிகிறது என பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் CEO ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

News Image

Author: Gowtham

Published: March 24, 2025

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தலைமை நிர்வாக அதிகாரி வேலைக்கான நேர்காணல்களின் போது, மாணவர்களிடம் வழக்கமான தொழில்துறை கேள்விகளைக் கேட்பதற்குப் பதிலாக, அவர் ஒரு எளிய 5 ஆம் வகுப்பு கணிதக் கேள்வியைக் கேட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதை அடுத்து, அவரது LinkedIn பதிவு வைரலானது.

கேள்வி: "ஒரு கார் முதல் 60 கிமீ மணிக்கு 30 கிமீ வேகத்திலும், அடுத்த 60 கிமீ மணிக்கு 60 கிமீ வேகத்திலும் பயணித்தால், அதன் சராசரி வேகம் என்ன?" என்று கேட்டிருக்கிறார். இதற்கு 
ஆச்சரியப்படும் விதமாக, BBA, BCA மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 50 பேர் பங்கேற்ற நேர்காணலில் 2 பேர் மட்டுமே 5ம் வகுப்பு கணக்கை சரியாக செய்துள்ளனர், மீதமுள்ளவர்கள் சிரமப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர்களிடம் ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது எனக் கேட்டால் ரீல்ஸ், டிஜிட்டல் ட்ரெண்ட் என பல ஐடியாக்கள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு யதார்த்த உலகை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை. சமூக வலைத்தளங்களில் ஜெனரல் Z  தலைமுறை சிறந்து விளங்கினாலும், அடிப்படை கணிதம், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் நிதி கல்வியறிவு இல்லாதவர்கள் என்ற வளர்ந்து வரும் கவலையை அவர் சுட்டிக்காட்டினார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தலைமை நிர்வாக அதிகாரியின் இந்த பதிவு சிறிது நேரத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும்மல்லாமல் சமூக ஊடக பயனர்களிடையே விவாதங்களைத் தூண்டியது. ஜெனரல் இசட் பட்டதாரிகளிடையே உள்ள திறன் இடைவெளி குறித்து பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து ஒரு பயனர், "நான் ஒப்புக்கொள்கிறேன். வாழ்க்கையின் பெரும்பகுதி சமூக ஊடகங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க, ஜெனரல் இசட்-ஐ சரியான திசையில் வலுவாக வழிநடத்த வேண்டும்" என்று கூறினார். மற்றொரு பயனர், "நவீன கல்வியில் இதுதான் நிலைமை, அங்கு மாணவர்கள் அடிப்படை அறிவு இல்லாமல் நவீன கருவிகளுக்கு அடிமையாகிறார்கள்.  இது அவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலவீனப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Tags:LinkedInBasic Math TestGen ZBengaluru CEO

No comments yet.

Leave a Comment