தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / தமிழ்நாடு

ஆவின் பால் கூட்டுறவில் ஏற்பட்ட சமீபத்திய மாற்றத்தால் நுகர்வோர் எண்ணிக்கை குறைவு

ஆவின் பால் கூட்டுறவு சங்கம், தனது சந்தையை விரிவுபடுத்தவும் விற்பனையை அதிகப்படுத்தவும் அரசாங்கத்தால் நடத்தப்படுகிற பால் கூட்டுறவை ( பால் மற்றும் பால் பொருட்களை சந்தைப்படுத்த ஒன்றாக வேலை செய்யும் பால் பண்ணையாளர்களின் குழு) உதவிக்கு அழைத்துள்ளது.

News Image

Author: Muthurani

Published: November 8, 2023

தமிழ் நாடு ஆவின் பால் கூட்டுறவு சங்கமானது சமீபத்தில் மாற்றிய பால் பாக்கெட்டின் நிறம் நுகர்வோர்களின் வரவேற்பை பெருமளவுக்கு பெறவில்லை.  பால் விற்பனையின் லாபத்தை அதிகப்படுத்த நுகர்வோருக்கு பிடித்த தரத்தில் இருந்த  கீரின் மேஜிக் என்கிற பச்சை வண்ண பால் பாக்கெட்டை நிறுத்தியுள்ளது. மற்ற‌ வண்ணங்களில் உள்ள பால் பாக்கெட்டுகளில் பால் கொழுப்பின் அளவையும் குறைத்துள்ளது.

கீரின் மேஜிக் என்கிற பச்சை வண்ண பாக்கெட் பாலின் விலை 23 ரூபாய் ஆகும். அதிக அளவிலான கொழுப்போடும் (4.5 சதவீதம்)  திட கொழுப்பற்ற தன்மையோடும் (8.5 சதவீதம்) தரமாக இருக்கும் இந்தப் பாக்கெட் பால் 23 ரூபாய்க்கு கிடைப்பது குறைந்த செலவாக / விலை மலிவானதாகக் கருதப்பட்டது.  பாலின் அளவை அதிகரிக்க வாடிக்கையாளர்கள் அந்தப் பாலை தண்ணீர் சேர்த்து இன்னமும் திரவமாக்கிக் கொள்வார்கள். தண்ணீர் கலந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் பாலின் கனத்தையும் சுவையையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

தமிழ் நாடு பால் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலச் சங்கமானது கீரின் மேஜிக் பால் பாக்கெட் தயாரிப்பைத் தொடரவேண்டாம் எனும் அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சங்கம் பால் உற்பத்தியும் விநியோகமும் எத்தகைய தடைகளாலும் பாதிக்கமால் இருப்பதை அரசு  உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

எனினும், ஆவின் நிறுவனம் இத்தகைய கூற்றுகளை ஒப்புக் கொள்ளவில்லை. நுகர்வோரின் உடல் நலனை கவனத்தில் வைத்து தான் கொழுப்பின் அளவை குறைத்திருக்கிறோம், லாப நோக்கத்தில் குறைக்கவில்லை என்று ஆவின் தரப்பு கூறுகிறது.

தமிழ்நாட்டு பால் வள மேம்பாட்டு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், "நுகர்வோர் பயன்பாட்டிற்கு ஏற்ற படி மூன்று விதங்களில், வண்ணங்களில்  பால் பாக்கெட் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் முதன்மைக் கவனம் செலுத்தும்.  ஊதா நிற பாக்கெட்டில் 3.5%  கொழுப்பு, நீல நிற பாக்கெட்டில் 3% கொழுப்பு, ஆரஞ்சு நிற பாக்கெட்டில் 6% கொழுப்பு நிறைந்த  பாலை உற்பத்தி செய்து விநியோகம் நடக்கும்" என்று கூறினார். 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்கும் போது 5 உத்தரவுகளில் கையொப்பமிட்டார். அதில் பால் விலை குறைப்பும் ஒன்று‌. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு கபட நாடகம் நடத்தி வருவதாகவும் எண்ணுகிறார்கள்.

கொள்முதலை அதிகரித்தல்
கொள்முதல் குறைந்துள்ளதாக ஆவின் நிறுவனத்தின் மீது இன்னொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால் பால் பாக்கெட்டில் உள்ள கொழுப்பு குறைக்கப்படுவதால் அதன் தரமும் சுவையையும் குறைகிறது என்று கருதுகிறார்கள்.

ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “விவசாயகளுக்கு தாமதமாகப் பணம் கொடுப்பதாலும் தனியார் நிறுவனங்களைவிட  குறைவான இழப்பீடு கொடுக்கப்படுவதாலும் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திடம் இருந்து விலக நேரிடுகிறது” என்று கூறினார். உற்பத்தி செலவிற்கு ஏற்ப கொள்முதல் விலையை அதிகப்படுத்தி நிர்ணயிக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று இச்சங்கம் அரசை வலியுறுத்துகிறது.

பால் வள மேம்பாட்டு துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொள்முதல் குறைந்தள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஆவின் பால் 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஆவின் தயாரிக்கும் தீபாவளி இனிப்புகளுக்கான ஆர்டர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20% அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டினார். இந்தப் பண்டிகை காலத்தில் ரூபாய் 149 கோடிக்கான ஆர்டர்களை ஆவின் பெற்றுள்ளது  என அவர் கூறினார். 

சந்தையை விரிவுப்படுத்தல்
ஆவின் பால் கூட்டுறவு சங்கம், தனது சந்தையை விரிவாக்கவும் விற்பனையை அதிகரிக்கவும் அரசின் பால் கூட்டுறவு முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறது.

கிருஷ்ணன் மூர்த்தி கூறுகையில், “சென்னையில் நாள்‌ ஒன்றுக்கு எளிதாக 30 லிட்டர் பாலை ஆவின் நிறுவனத்தால் விற்க முடியும். ஆனால் ஆவின் கூட்டுறவு வேண்டுமென்றே தனது தேவையை கட்டுப்படுத்திக் கொள்கிறது” என்று குற்றம் சாட்டினார். தற்போது, சென்னையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் 15 லட்சம் ஆவின் பால் பயன்படுத்தப்படுகிறது.

“தமிழகம் முழுவதும் உள்ள இரயில்வே நிலையத்தில் ஆவின் பொருட்கள் பரவலாக கிடைத்துக் கொண்டிருந்தன. தற்போது, ஆவின் கடைகளைக் ரயில் நிலையங்களில் காண முடிவதில்லை. ஆவினுக்கு பதில் அமுல் நிறுவனங்கள் காணப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் கூட போதிய அளவில் ஆவின் பால் கிடைப்பதில்லை” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் கர்நாடக மாநிலம், அமுல் மற்றும் பிற தனியார் நிறுவனங்களிடமிருந்து ‘நந்தினி’ எனப்படும் மாநில அரசின் பால் கூட்டுறவு அமைப்பை காப்பாற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி கூறினார்.

தமிழ் நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட ஆவின் கடைகள் மூலமாகவும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் ஆவின் பாலும் பால் பொருட்களும்  விநியோகிக்கப்படுகின்றன.

(This is a translated version of an article titled Recent Changes by Tamil Nadu Milk Co-op Aavin Met with Consumer Backlash)

Tags:TamilNadutamilnadukanalnewstamilnewsCoopMilkDairyDairyProductsAvinMilkCo-operativeSocietyAvinAavinAavinMilk