- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
விபத்தில் மூளை சாவடைந்த பெண் வங்கி ஊழியரின் உடல் உறுப்புக்கள் தானம்
விபத்தில் மூளைச்சாவடைந்த தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் நிவேதா பிரியதர்ஷினி மறைவுக்கு சக ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Author: Kanal Tamil Desk
Published: November 17, 2024
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் நிவேதா பிரியதர்ஷினி. இவர் கடந்த நவம்பர் 12ஆம் தேதி பணிக்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த நிவேதா பிரியதர்ஷினி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததை ஒட்டி நிவேதா பிரியதர்ஷினி துரதிஷ்டவசமாக இன்று (நவம்பர் 17) உயிரிழந்தார்.
இறந்த பிறகும், நிவேதா பிரியதர்ஷினியின் அவரது உடல் உறுப்புகள் உயிர்பெற்று மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், உடலை தானமாக வழங்க நிவேதா பிரியதர்ஷினியின் குடும்பத்தார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் (TNGBWU) மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஆபிஸர்ஸ் சங்கத்தினர் (TNGBOA) தங்கள் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவித்துள்ளனர்.