Advertisement
வங்கி மேலாளரின் துணிச்சல் செயல்! காவல்துறையிடம் வசமாக சிக்கிய சைபர் மோசடி கும்பல்!
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை மேலாளர் ஒருவர், சைபர் மோசடிக் குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவி செய்துள்ளார். அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Author: Kanal Tamil Desk
Published: November 23, 2024
Advertisement
மும்பையின் குர்லா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கிளையில் பெரிய அளவிலான சைபர் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த மோசடி சம்பவம் குறித்த முக்கிய விவரங்களை அந்த வங்கி கிளையின் மேலாளர் சஞ்சய்குமார் ராம்தாஸ் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
கண்டுபிடித்தது எப்படி?
Advertisement
வங்கி கணக்குகள் தொடர்புடைய சைபர் மோசடிகள் பற்றிய அதிகமான புகார்கள் அந்த வங்கி கிளை மீது தொடர்ந்து எழுந்த காரணத்தால், மேலாளர் இதனை தன்னுடைய கவனத்தில் எடுத்துக்கொண்டு சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை அவர் தொடர்ச்சியாக கவனித்து வந்துள்ளார். அப்படி மணியார் என்ற ஒருவரது வங்கி கணக்கு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் பல்வேறு நபர்களுடன் வங்கிக்கு வருவதும் புதிய கணக்குகளைத் திறக்க உதவியதையும் சஞ்சய் குமார் ராம் கண்டறிந்துள்ளார்.
இந்த சந்தேகம் வலுப்பெற்ற போது நேரடியாகவே அந்த நபரை அழைத்து எதற்காக இவ்வளவு வங்கி கணக்கு தொடங்க உதவி செய்கிறீர்கள்? என மேலாளர் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் வணிகத்திற்காக தன் உறவினர்களின் பெயரில் கணக்குகள் திறப்பதாகவும், இதுவரை மொத்தமாக 10 பேருக்கு கணக்குகள் திறக்க உதவியதாகவும் கூறியிருக்கிறார்.
களத்தில் இறங்கிய மேலாளர் :
அந்த நபர் பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், மேலாளர் சஞ்சய் குமார் ராம், குறிப்பிட்ட நபர் ஓபன் செய்த வங்கிக்கணக்குகள் எத்தனை என்பதை ஆய்வு செய்தார். அப்போது அந்த நபர் மொத்தமாக 35 புதிய வங்கி கணக்குகளை ஓபன் செய்தது தெரிய வந்தது. இந்த கணக்குகள் மூலம் சட்டவிரோதமாக பணத்தை கையாள்வதற்கும், வெளிநாட்டு பண பரிவர்தனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதும் அதன்பிறகான போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தாஸ், மணியார் என்பவர்களின் உதவியுடன் திறக்கப்பட்ட வங்கி கணக்குகளைச் சரிபார்த்தபோது, பெங்களூருவில் புகாரளிக்கப்பட்ட சைபர் மோசடி வழக்குடன் வங்கி கணக்குகள் தொடர்புடையது என்பது மேலாளருக்கு தெரியவந்தது. இந்த கண்டுபிடிப்பால் மேலாளர் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தவேண்டும் என முடிவெடுத்து காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை:
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், செப்டம்பர் 2024 முதல் மணியார் 35 கணக்குகள் திறக்க உதவியுள்ளதும், அவற்றில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் நடந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட தகவல்கள் கண்டறியப்பட்டன. அதனை தொடர்ந்து FIR பதிவு செய்யப்பட்டு, 35 கணக்குகளின் நிதி நடவடிக்கைகள் மற்றும் சைபர் மோசடி வலையமைப்புடன் இருக்கும் தொடர்புகள் பற்றி போலீசார் தீவிரமாக தங்கள் விசாரணையை தொடங்கினர்.
தற்போதைய நிலை :
தற்போதைய விசாரணையில் சட்டவிரோத பணபரிவர்தனையில் குற்றவாளிகளின் முழுமையான பங்கைக் கண்டறிய ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அமிழ் ஃபிரோஸ் மணியாரை கைது செய்துள்ளனர். விசாரணைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் மோசடி செயல்பாடுகளின் முழுமையான விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு வங்கி ஊழியர்களின் விழிப்புணர்வு மற்றும் நிதி மோசடிகளை தடுக்க அவர்களது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை வங்கி மேலாளரின் செயல் வெளிக்காட்டுகிறது. வங்கிகளில் சந்தேகமான பணப்பரிவர்த்தனை செயல்பாடுகளை கண்காணிக்கும் முறைகள் மக்களின் நம்பிக்கையையும் நிதி அமைப்புகளின் நேர்மையையும் பாதுகாக்க மிகவும் அவசியமாகின்றன. இந்த சம்பவத்தை கண்டுபிடித்து கொடுத்த அந்த வங்கி மேலாளருக்கு காவல்துறை பாராட்டுகள் குவிந்து வருகிறது.
No comments yet.