தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Thursday, Jul 3, 2025 | India

Advertisement

Home / இந்தியா

உங்கள் PF கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? புதிய வழிமுறை இதோ…

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் (EPFO) ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் வழிமுறை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 25, 2024

Advertisement

ஆதார் எனும் தனிமனித அடையாள எண்ணை ஒருவரது வங்கி கணக்கு, பான் எண் என பல்வேறு தனிமனித அடையாள தளங்களில் (வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து) இணைப்பது தற்போது கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறையும் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO-வில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்கள் தங்கள் UAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. EPFO தளத்தில் உள்ளீடு செய்து இந்த இணைப்பு செயல்முறையை மேற்கொள்ளலாம். 

Advertisement

100% பயோமெட்ரிக் அடையாள உறுதியடன் உள்ள தனிநபர் அடையாள எண்ணான ஆதாரை EPFOவில் இணைப்பது மூலம் பல்வேறு நலத் திட்டங்கள், மானியங்கள், ஊக்கத் தொகைகள் ஆகியவை கிடைப்பது எளிதாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளிக்கிறது.

பயனர்கள், ஒரு நிறுவனத்தில் சேரும் போதே UAN கணக்கு தொடங்குகையில் ஆதார் எண்ணை அளித்து அதன் மூலம் EPFO கணக்கு தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. 

UAN - ஆதார் இணைப்பு செயல்முறையானது, அரசாங்கத்தின் பல்வேறு செயல்முறையை எளிதாக்குகிறது. அதன் மூலம் அரசாங்க நலத்திட்டங்கள், செயல்பாடுகள் எந்தவித தடையுமின்றி கிடைக்கப்பெறுகின்றன. இதன் மூலம் தேவையான ஆவணங்கள் தவிர்த்து மற்ற ஆவணங்களின் தேவை என்பது குறைக்கப்படுகிறது.

வரும், நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை - UAN எண்ணுடன் இணைக்கும் செயல்முறையை முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

UAN - ஆதார் இணைப்பு செயல்முறை : 

இந்த இணைப்பானது, ஆதார் மற்றும் UAN எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்னிற்கு வரும் OTP மூலம் உறுதிசெய்யப்படும். எனவே, UAN மற்றும் ஆதாரில் ஒரே தொலைபேசி எண் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

  • EPFO அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று, பயனர் தங்கள் UAN நம்பரை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதில் வரும் முதல் பக்கத்தில் "முக்கிய இணைப்புகள் (Important Links)" என்ற விருப்பத்தை கிளிக் செய்து " Activate UAN"எனும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • அதன் பின், UAN உடன் இணைக்கப்பட வேண்டிய ஆதார் எண், ஆதார் அடையாள அட்டையில் உள்ளவாறு பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் போன்ற முக்கியமான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • பிறகு ஆதார் எண் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்த வேண்டும். 
  • அதன் பின்னர் கிடைக்கப்பெற்ற OTP-ஐ கிளிக் செய்து, UAN - ஆதார் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அளிக்க வேண்டும். 
  • இறுதியில் அதற்கும் , பயனர் மொபைல் நம்பருக்கு ஒரு OTP கிடைக்கும் அதனை உள்ளீடு செய்ய வேண்டும். 
  • தற்போது வெற்றிகரமாக UAN நம்பருடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பயனர் மொபைல் நம்பருக்கு கிடைத்துவிடும். 
Tags:EPFOUANAadhar

No comments yet.

Leave a Comment