தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Thursday, Jul 10, 2025 | India

Advertisement

Home / இந்தியா

ரூ.1,435 கோடியில் புதிய பான் 2.O திட்டம்! பழைய பான் கார்டு என்னவாகும்?

பழைய பான் கார்டுகளை புதுப்பித்துகூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய QR Code வசதி கொண்ட புதிய பான் கார்டுகளை வழங்கும் ‘பான் 2.O’ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 27, 2024

Advertisement

மத்திய வருமான வரித்துறையால் வழங்கப்படும் தனிப்பட்ட நிதி அடையாள எண்ணான PAN (Personal Account Number) எண் கொண்ட அட்டை என்பது தனிநபரின் நிதி வரவு செலவு விவரங்களை கண்காணிக்கும் ஆதார் அட்டை போன்றதாகும். இதன் மூலம் தனி நபர் எத்தனை வங்கி கணக்குகளில் வரவு செலவுகளை வைத்திருந்தாலும் அவை ஒன்றாக முறைப்படுத்தி கண்காணிக்கப்படும். 

10 இலக்க எண் மற்றும் எழுத்துக்கள் அடங்கிய அடையாள எண் பான் எண்ணாக குறிப்பிடப்படுகிறது. 1972ஆம் ஆண்டு முதல் இந்த பான் எண் பயன்பாடு நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் சுமார் 78 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். அதில் 98% பேர் தனிநபர்கள் ஆவார். 

Advertisement

இந்த பான் கார்டு சேவையை மேம்படுத்தவும், பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கவும் ‘பான் 2.O’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 25.11.2024 அன்று ரூ.1,435 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  

பான் 2.0 : 

பான் 2.O என்பது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பழைய பான் அட்டைகளை மேம்படுத்தி, QR Code வசதிகளை உட்புகுத்தி, பாதுகாப்பு வசதிகள் கொண்ட பான் அட்டைகளை வழங்கும் திட்டமாகும்.   

முக்கிய அம்சங்கள் : 

இதன் மூலம் பழைய பான் அட்டைகள் எந்தவித கட்டணமும் இன்றி QR Code பொருத்தப்பட்டு புதுப்பித்து அளிக்கப்படும்.

PAN, TAN, TIN என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பான் 2.Oவாக மாற்றப்படும்.  

முன்பை விட பாதுகாப்பு அம்சங்கள் அதிகப்படுத்தப்படும். 

தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும். 

புதுப்பிக்கப்பட்ட பான் 2.O-வானது காகிதமில்லா இணையவழி செயல்பாட்டை ஆதரிக்கும் வண்ணம் ஆதார் போல செயல்படுத்தப்படும் என குறிப்பிப்பிடப்படுகிறது.  

செயல்பாடு எளிதாக இருக்கும் வண்ணமும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியும், தரத்தை உயர்த்தியும் பான் 2.O திட்டம் செயல்படுத்தபடும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

பழைய பான் கார்டு? 

பான் 2.O திட்டம் மூலம் பழைய பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு QR Code கொண்ட புதிய பான் கார்டு எந்தவித கட்டணமும் இன்றி புதுப்பித்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  

ஆனால், அது குறித்து அதிகாரப்பூர்வ வழிமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

காகிதமில்லா பான் கார்டு என்பதால், ஆதார் போல இணையவழியில் பதிவிறக்கம் செய்யும்படி இருக்கும் என்று பலரும் குறிப்பிடுகின்றனர்

Tags:PAN 2.OPANIncome TaxIncome Tax Department

No comments yet.

Leave a Comment