தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

மூத்த குடிமக்கள் கவனத்திற்கு! ஓய்வூதியத்திற்கான ஆயுள் சான்றிதழை எளிதில் பெறுவது எப்படி?

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்கு நேரடியாக செல்லாமலே தங்களுடைய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை (Digital Life certificate) எவ்வாறு பெறுவது என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 1, 2024

ஜீவன் பிரமான் பத்ரா (Jeevan Pramaan Patra) ஓய்வூதிட்டத்தின் கீழ்  ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழை ( (Life certificate)) பல்வேறு விநியோக முகவர்களுக்கு (வங்கி அல்லது தபால் நிலையம்) சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அப்படி சமர்ப்பித்தால் மட்டும் தான் ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும் நிலை உள்ளது. 

ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்லாமலேயே எளிமையான முறையில் இணையத்தில் சமர்ப்பிக்கும் வழிமுறைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். 

ஆயுள் சான்றிதழ் என்றால் என்ன?

ஆயுள் சான்றிதழ் (Life certificate) என்பது மத்திய அரசு, மாநில அரசு அல்லது வேறு ஏதேனும் அரசு நிறுவனங்களில் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு, வங்கிகள், தபால் நிலையங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோக முகவர்களிடம் சென்று சமர்ப்பிக்கும் சான்றிதழ் தான் ஆயுள் சான்றிதழ். இந்த சான்றிதழ் வழங்கினால் மட்டுமே ஓய்வூதியம் தவறாமல் கிடைக்கும். 

சமர்ப்பிக்கும் முறைகள் : 

ஜீவன் பிரமான் பத்ரா திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெரும் வங்கி அல்லது தபால் நிலையங்களில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்கள், எழுத்துப்பூர்வ சான்றிதழ் படிவங்கள் போன்றவற்றின் மூலம் தங்கள் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம் என்கிற நிலை உள்ளது. ஆனால், வீட்டில் இருந்தபடியோ அல்லது தபால் நிலையங்களுக்கு செல்லாமல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வழி இருக்கிறதா என்று பார்த்தால், அதற்கான விடை தான் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ். 

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் : 

மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் பெரும் வங்கி அல்லது தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க சில சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு இந்த சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக அரசாங்கம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை (டிஎல்சி) அறிமுகப்படுத்தியுள்ளது. 

DLC (Digital Life Certificate)-ஐ பயன்படுத்துவதன் மூலம், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பிக்க நேரில் செல்வதைத் தவிர்க்கலாம்.

எவ்வாறு சமர்ப்பிப்பது? 

  • முதலில் பயனர்கள் தங்கள் ஆதார் அட்டை எண் ஓய்வூதியம் வழங்கும் முகமையில் (வங்கி, தபால் அலுவலகம் அல்லது பிற) இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
  • பயனர்கள் தங்களுடைய ஸ்மார்ட்போன் உதவியுடன் ‘ஆதார்ஃபேஸ்ஆர்டி (Aadhaar Face RD)’ மற்றும் ‘ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆப் (Jeevan Pramaan Face App)’ ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 
  • அந்த செயலிகளில் ஓய்வூதியம் பெறுபவரின் விவரங்களை உள்ளிடவும்.
  • மேற்கண்ட செயலிகளில் பயனர்கள் தங்கள் புகைப்படம் எடுத்து தேவையான தகவல்களை சமர்ப்பிக்கவும்.
  • அதன்பிறகு பயனர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு செய்தியை பெறுவார்கள். 
  • பிறகு அந்த செயலிகள் வழியாக டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

சான்றிதழின் நிலையை எப்படி சரிபார்ப்பது? 

ஜீவன் பிரமான் பத்ரா அதிகாரப்பூர்வ தளம் வெளிட்டிருக்கும் தகவலின்படி, ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பிற ஓய்வூதியம் வழங்கும் முகமைகளுக்கு சென்று சரிபார்க்க தேவையில்லை. 

ஏனென்றால், அரசாங்கம் தற்போது கொண்டு வந்திருக்கும் ஆயுள் சான்றிதழ் (DLC) அவர்களுக்கு மின்னணு முறையில் தாமாகவே கிடைக்கும் வசதியை கொண்டுள்ளது. இதில், பயனர் தங்கள் DLC ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். DLC-ஐ சமர்ப்பித்த பிறகு, பயனர் ஒரு SMS பெறுவார்.

இந்த செயல்பாட்டு ஐடி-யும் இதில் இருக்கும்.

பிறகு, அதனை கொண்டு https://jeevanpramaan.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பயனர் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Tags:Digital Life CertificateLife certificateJeevan Pramaan Patram