தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு : மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம்

மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள் (PSBs) இணைப்புகளை புதிதாக மேற்கொள்ளும் விதமாக எந்த திட்டத்தையும் தற்போது பரிசீலிக்கவில்லை என்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 5, 2024

அண்மைக்காலமாகவே வங்கிகள் இணைப்பு பற்றிய பொதுவாக செய்திகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்களும் உலாவின. இதுகுறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலையை வலுவூட்ட அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளர்.

இணைக்கப்பட்ட வங்கிகள் : 

ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற வங்கி ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் போது 27 பொதுத்துறை வங்கிகள் 12ஆக குறைக்கப்பட்டது.  உலக அளவிலான செயல்திறன் கொண்ட அரசு துறை வங்கிகளை உருவாக்குவதற்காக இந்த ஒருங்கிணைப்பு நடைபெற்றது என கூறப்பட்டது. 

  • யுனைடெட் வங்கி ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல் வங்கி ஆஃப் காமர்ஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது. 
  • சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது.
  • அலஹாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
  • ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் வங்கியுடன் இணைக்கப்பட்டன. 
  • தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை பாங்க் ஆஃப் பாரோடாவுடன் இணைக்கப்பட்டன. 
  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதியா மகிளா வங்கி ஆகியவை SBI-யுடன் இணைக்கப்பட்டன.

நன்மைகள் : 

  • நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பு.
  • பொருளாதார ரீதியில் பலன்கள்.
  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு.
  • நிதி ரீதியில் ஒருமித்த வளர்ச்சி.

என வங்கிகள் ஒருங்கிணைப்பு மூலம் பல வகையான நன்மைகள் ஏற்பட்டதாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

புதிய வங்கி இணைப்புகள் : 

மேலும், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்து தற்போது எந்த ஒரு முயற்சியையும் அரசு எடுக்கவில்லை. அப்படி பரவும் தகவல்கள் வெறும் வதந்தி தான். பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு பிறகு அதன் செயல்பாட்டில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றும்,  

ஒருங்கிணைப்பு மூலம் பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றங்கள், சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவை ஏற்பட்டுள்ளது. மேலும், இது அனைத்து முக்கிய நிதி மேம்பாட்டிலும் ஒரே மாதிரியான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி  தெரிவித்துள்ளார். 

Tags:Bank MergerPublic sector banksPankaj ChaudharyPSB