- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நியமனம்
மத்திய வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வரும் சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 9, 2024
நாட்டின் நாணய கொள்கையை உருவாக்குதல், வட்டி விகிதத்தை முறைப்படுத்துதல், நிதி அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல் என இந்தியவின் அரசு வங்கியாக செயல்படும் ரிசர்வ் வங்கியின் தலைமை ஆளுநர் பொறுப்பில் சக்திகாந்த தாஸ் தற்போது செயல்பட்டு வருகிறார். இவர் 25வது ஆளுநராக கடந்த 2018ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அறிவிக்கப்படும் இந்த ஆளுநர் பொறுப்பானது, கடந்த 2021இல் மீண்டும் சக்திகாந்த் தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பில் நீட்டிக்கப்டுவதாக மத்திய அரசு அறிவித்தது.
சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் வரும் டிசம்பர் 12ஆம் தேதியோடு நிறைவு பெரும் வேளையில், அவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய நபர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் கீழ் செய்லபடும் மத்திய நியமனக் குழு, ரிசர்வ் வங்கியின் 26வது தலைமை ஆளுநராக சஞ்சய் மல்கோத்ராவை நியமித்து அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி இவர் ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக பதவியேற்க உள்ளார்.

யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நிதித்துறை, மின்சாரத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) கணினி அறிவியலில் பொறியியல் பட்டதாரியான மல்ஹோத்ரா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
மல்ஹோத்ரா தற்போது வகித்து வரும் வருவாய்த்துறை செயலாளர் பதவிக்கு முன்பு, நிதி மற்றும் வங்கித் துறைகளை கண்காணிக்கும் நிதிச் சேவைகள் துறையில் செயலாளராக பொறுப்பில் இருந்தார்.