- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தொடர் சரிவுடன் நிறைவடையும் இந்த வார பங்குசந்தை நிலவரம்
கடந்த வாரம் டிசம்பர் 13-ல் BSE 82,133.12 புள்ளிகளுடனும், NSE 24,768.30 புள்ளிகளுடனும் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 18-ம் தேதி நிலவரப்படி BSE மற்றும் NSE முறையே 80,182.20, 24,198.85 என நிறைவு பெற்றுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 19, 2024
கடந்த வார இறுதி நாளில் (டிசம்பர் 13) இந்திய பங்குசந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றன. ஆனால், இந்த வார பங்கு சந்தை தொடர்ந்து 3 நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த வாரம், இந்திய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 24,768.30 என்ற அளவிலும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 82,133.12 என்ற அளவிலும் நிறைவு பெற்றது.
ஆனால், இந்த வாரம் டிசம்பர் 18-ம் தேதி நிலவரப்படி மும்பை பங்குசந்தை (BSE) சென்செக்ஸ் (கடந்த வார ஒப்பீடு) 1950.92 புள்ளிகள் குறைந்து 80,182.20 என்ற புள்ளி அளவிலும், தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி (கடந்த வார ஒப்பீடு) 569.45 புள்ளிகள் குறைந்து 24,198.85 என அளவிலும் நிறைவு பெற்றது.
அதேபோல, மிட்கேப் நிறுவனங்களின் பங்குகளும் தொடர் சரிவையே சந்தித்து வருகின்றன. டிசம்பர் 18ஆம் தேதி நிலவரப்படி, நிஃப்டி மிட்கேப் 50 0.66% குறைந்துள்ளது. அதேபோல, ஸ்மால்-கேப் பங்குகளும் பின்தங்கின. நிஃப்டி ஸ்மால் கேப் 100, 0.87% குறைந்துள்ளது.
சென்செக்ஸ் :
டிசம்பர் 18 நிலவரப்படி, BSE சென்செக்ஸில் விப்ரோ (+1.25%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (+0.64%), சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (+0.63%), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (+0.55%), டெக் மஹிந்திரா (+0.50%) ஆகியவை ஏற்றம் கண்டன.
டாடா மோட்டார்ஸ் (-3.03%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (-2.56%), என்டிபிசி (-2.09%), ஐசிஐசிஐ வங்கி (-1.46%), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (-1.31%) ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றன.
நிஃப்டி :
டிசம்பர் 18 நிலவரப்படி NSE நிஃப்டியில், ட்ரெண்ட் (+2.48%), டாக்டர். ரெட்டிஸ் லேபரட்டரீஸ் (+2.22%), சிப்லா (+1.49%), விப்ரோ (+1.21%), பஜாஜ் ஆட்டோ (+0.69%) நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.
டாடா மோட்டார்ஸ் (-3.08%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (-2.50%), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (-2.19%), என்டிபிசி (-2.09%), JSW ஸ்டீல் (-2.07%) ஆகியவை சரிவை சந்தித்தன.