- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சென்னையில் பட்டபகலில் வங்கி ஊழியருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை தி.நகரில் உள்ள HDFC வங்கிக் கிளையில் மேலாளராக பணியாற்றி வரும் தினேஷ் என்பவரை மர்ம நபர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து அரிவாள் போன்ற ஆயுதத்தால் வெட்டியுள்ளர்.

Author: Kanal Tamil Desk
Published: December 19, 2024
சென்னை தி-நகர் பகுதியில் பர்க்கிட் சாலையில் செயல்பட்டு வரும் HDFC தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் இன்று வழக்கம் போல தனது வங்கி வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
அப்போது பட்டப்பகலில், வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற கூறிய ஆயுதத்தை எடுத்து, வங்கி ஊழியர் தினேஷை வெட்டியுள்ளார். இதில் தினேஷின் காதுப் பகுதி வெட்டுப்பட்டு ரத்தம் வெளியேறி, அவர் வலியால் துடித்துள்ளார்.
வங்கி ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது அந்த நபர் தி.நகர் காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட வங்கி ஊழியர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வங்கி மேலாளரை, மர்ம நபர் ஒருவர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளும் மீண்டும் எழுந்துள்ளது.
சமீபகாலமாகவே வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பது அனைத்து வங்கி ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.