தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு கிடுக்குபிடி! RBI புதிய உத்தரவு!

வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத நபர்கள் மற்றும் நிறுவனங்கள் யார் யார் என்பதை 6 மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 26, 2024

இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு வாரங்களுக்கு முன்பு, வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிவிட்டு "வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள்" (Wilful defaulters) யார் யார் என்கிற விவரத்தை 6 மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் அதனை RBI-யிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் ஒரு உத்தரவை RBI பிறப்பித்திருந்தது. 

இந்த உத்தரவை அடுத்து, சில வங்கிகள், RBI-யிடம் இதற்கு கூடுதல் அவகாசம் கேட்டனர். ஆனால், RBI தரப்பு, அதனை மறுத்து, ‘அதெல்லாம் முடியாது’ என்பது போல கூறி. அவர்களுடைய கோரிக்கையையும் நிகாரித்துள்ளது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே பணத்தை திருப்பி செலுத்தாத நபர்களின் பட்டியலை வங்கிகள் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 

இந்நிலையில், எப்படி கடன் வாங்கியவர்களின் பட்டியலில் இருந்து வேண்டும் என்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை வங்கிகள் தேர்வு செய்கிறது என்பது பற்றி இந்த செய்திகுறிப்பில் காணலாம். 

முதல்நிலை ஆய்வு :

முதலில் நீண்ட நாட்கள் அதாவது 90 நாட்கள் ஆகியும் கடன் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவோ, தவணை தொகையோ திருப்பி கொடுக்கப்படவில்லை என்றபோது, அதனை வங்கி அதிகாரிகள், உள்நிலை ஆய்வுக்கு உட்படுத்தி வேண்டுமென்றே கடன் செலுத்தாத நபராக இருக்க அதிக வாய்ப்பு உள்ளவர்களை உறுதி செய்து அவர்களை தேர்வு செய்து வைத்துக்கொள்கிறார்கள். 

கடனாளிகளுக்கு வாய்ப்பு : 

இந்த செயல்முறை முடிந்த பிறகு, அந்த சந்தேகப்பட்ட கடனாளரை நேரில் அழைத்து , கடனை திருப்பி செலுத்தாதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்த முடியாமல் போனவர்கள். ஏன் என்ற காரணத்தை விளக்கமாக வங்கி அதிகாரிகளிடம் அவர்கள் கூற வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

அதன்பிறகு, திருப்பி செலுத்தாத கடனாளர்கள் சொல்லும் கரணங்கள் ஏற்கும்படி இருக்கிறதா? இல்லையா என்பதை வங்கியின் தலைமை அதிகாரி மற்றும் வங்கி ஆய்வு குழு கலந்தாலோசித்து முடிவு செய்கிறது. 

அடுத்தகட்ட நடவடிக்கைகள் : 

ஒருவேளை, "வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள்"  என்ற சந்தேகத்தில் கடனை திருப்பி செலுத்தாத நபரின் பெயர் வந்துவிட்டது என்றால் உடனடியாக அவர்களுடைய புகைப்படங்கள் வங்கி நிர்வாகத்தால் வெளியிடப்படும்.

இனிமேல் அவரால் கடன் வாங்கமுடியாத அளவுக்கு அவருக்கு மற்ற வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் தடைவிதிக்கப்படும். கடனுக்கான தொகை எவ்வளவோ அதற்கு ஏற்ப அந்த நபருடைய சொத்துக்களை அரசு கைப்பற்றும். 

இது கடன் வாங்குபவரின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சட்ட நடவடிக்கைகளையும் தூண்டுகிறது. இந்த விவகாரத்தில் சில சமயம் கடனாளிகள் சிலர் இந்த நிதி சிக்கல் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கலாம். 

எனவே, அவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்வதற்குள் அவர்களை அடையாளம் கண்டு கடனை வசூல் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி 6 மாதங்களில் ‘வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதோர்’ விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என RBI உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாவர்கள் புகைப்படங்கள் வெளியிடப்படுவதால் அவர்கள் வெளிநாடு தப்பி சென்றாலும் உடனடியாக அவர்களை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது. 

Tags:Wilful DefaultersRBIReserve Bank of India