- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கடன் பெற்றவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்க கூடாது! கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
கடன் பெற்றவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் எந்த கடன் வசூல் செயலையும் ஏற்க முடியாது எனவும், சட்ட நடைமுறைகளை பின்பற்றி மட்டுமே கடனை வசூல் செய்ய வேண்டும் எனவும் கேரள மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 26, 2024
கேரள உயர்நீதிமன்றம் அண்மையில், கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாதவர்கள் பற்றி ஒரு முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது. அதில் வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத கடனாளர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டு அவர்களை மனஅழுத்தத்துக்கு உட்படுத்தும் முறையை நிதி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி முரளி புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த முக்கிய உத்தரவு வழங்கப்பட்டது. நீதிமன்றம், கடனாளியை பொதுவெளிக்கு அடையாளப்படுத்தும் நடைமுறை ஒருவரின் தனியுரிமை மீதான நேரடி தாக்குதல் எனவும் நீதிபதி குற்றம் சாட்டினார்.
வழக்கு விசாரணையில் நீதிபதி மேலும் கூறுகையில், ஒருவரின் தனிப்பட்ட மற்றும் சமூக கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் நடத்த அனுமதிக்க முடியாது. இது இந்திய அரசியலமைப்பின் தனிமனித உரிமைக்கான சட்ட விதி 21-ன் கீழ், தனிப்பட்ட நபர்கள் வாழ்வதற்கான உரிமையை சிதைக்கும் செயலாகும் என குறிப்பிட்டார். கடனாளர்களின் புகைப்படங்களையும் விவரங்களையும் பொதுவில் வெளியிடுவது, சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றும் கூறினார்.
கடனாளியை அடையாளப்படுத்தி அவர்களிடம் கடனை வசூலிக்க எந்த சட்ட விதியிலும் கூறப்படவில்லை. கடன்களை திருப்பி பெறுவதற்காக வசூல் செய்யும் நடைமுறைகள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி என்ன :
இந்த வழக்கின் முக்கிய காரணமே, செம்பழந்தி வேளாண் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தில், கடன் பெற்றவர்களில் கடன் தொகையை திருப்பி கொடுக்காதவர்கள் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவ்வாறு செய்வது தவறு. இந்த நடைமுறையை உடனடியாக நீக்கம் செய்யவேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதற்கு வங்கி தரப்பு வாதமும் நடத்தியது. வங்கி பல முறை கடனாளர்களிடம் பணம் திருப்பி செலுத்துமாறு கோரிய பின்னரும், அவர்கள் பணம் செலுத்தாமல் இருந்ததால், இதுபோன்ற முறைமையை மேற்கொண்டதாக கூறியது. இந்த முறையானது கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிக்க ஒரு யுக்தியாக அவர்களுக்கு இருந்ததாகவும், இந்த முறையால் பலர் கடனை திருப்பி செலுத்தியதாகவும் வங்கி தரப்பினர் தெரிவித்தனர். இதனால், அந்த செயலில் மேலும் வெற்றி கிடைத்ததால், புதிதாக மேலும் பலர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தின் முக்கிய பதில் :
நீதிமன்றம், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு வசூலிக்கும் முறையை ஒரு பழமைவாத மற்றும் தேவையற்ற முறை எனக் குறிப்பிட்டது. ஆனால், அந்த நடைமுறை சட்டபூர்வமாக உள்ளதா என்ற விவாதத்தை நீதிபதிகள் விவாதிக்கவில்லை. அது இந்த வழக்கின் மையப் பிரச்சினை அல்ல என்பதை நீதிபதி தெரிவித்தார்.
தீர்ப்பின் முக்கியமான அம்சங்கள் :
கண்ணியத்துடனும் தனியுரிமையுடனும் வாழும் உரிமை:
கடனாளிகளின் மனதுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் எந்த செயல்களும் சட்டத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது. கடனை திருப்பி பெறுவதற்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உரிய சட்ட நடைமுறைகளை மட்டும் பின்பற்ற வேண்டும். இந்த தீர்ப்பு, வங்கிகள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் தங்களின் கடன் வசூல் நடவடிக்கைகளில் கண்ணியத்தையும் சட்டங்களை பின்பற்றுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதி முரளி புருஷோத்தமன் தலைமையிலான அமர்வு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.