வார இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை நிலவரம் இதோ…
தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி, 63.20 புள்ளிகள் உயர்ந்து 23,813.40 எனவும், மும்பை பங்கு சந்தை (BSE) சென்செக்ஸ் 226.59 புள்ளிகள் உயர்ந்து 78,699.07 என நிறைவு பெற்றுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 27, 2024
வார இறுதி நாளில் (டிசம்பர் 27) பங்குச்சந்தை சற்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. இன்றைய பங்குசந்தை நிலவரத்தில் வங்கி பங்குகளும், ஆட்டோமொபைல் பங்குகளும் சற்று ஏற்றம் கண்டன. இதனால் இன்றைய நிலவரம் பச்சை நிறத்துடன் நிறைவுபெற்றது.
தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 63.20 (+0.27%) அளவுக்கு அதிகரித்து 23,813.40 என்ற அளவில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. இன்று முழுவதும் ஏற்ற இரக்கத்தை சந்தித்த நிஃப்டி, குறைந்தபட்சம் 23,800.6 என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,938.85 என்ற அளவு வரையிலும் சென்றது.
மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 78,598.55 முதல்79,043.15 வரை ஏற்ற இறக்கத்துடன் சென்றது. இறுதியில் சற்று 78,699.07-ல் முடிவடைந்தது, இது 0.29% சிறிய ஏற்றத்தை கொண்டு, 226.59 புள்ளிகள் என்ற அளவில் உயர்ந்தது.
நிஃப்டி மிட்கேப் 50யானது 0.27% அளவு குறைவாக முடிவடைந்தது. ஸ்மால் கேப் பங்குகளும் நிஃப்டி 50யுடன் ஒப்பிடும் போது பின்தங்கின. நிஃப்டி ஸ்மால் கேப் 100ஆனது, 27.2 புள்ளிகள் (+0.15%) அதிகரித்து 18,728.65-ல் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் :
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸில், அதிக லாபம் ஈட்டியவர்கள் பட்டியலின்படி, மஹிந்திரா & மஹிந்திரா 2.47%என்ற அளவிலும், இண்டஸ்லண்ட் வங்கி 2.30% என்ற அளவிலும், விப்ரோ 1.51% என்ற அளவிலும், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.37% என்ற அளவிலும், டாடா மோட்டார்ஸ் 1.32% என்ற அளவிலும் உயர்வை கண்டன .
அதே போல, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 1.49% என்ற அளவிலும், டாடா ஸ்டீல் 1.00% என்ற அளவிலும், அல்ட்ராடெக் சிமெண்ட் 0.72% என்ற அளவிலும், HCL டெக்னாலஜிஸ் 0.52% என்ற அளவிலும், லார்சன் & டூப்ரோ 0.48% என்ற அளவிலும் சரிவை கண்டன.
நிஃப்டி :
தேசிய பங்கு சந்தை நிஃப்டியில், அதிக லாபம் ஈட்டியவர்கள் பட்டியலில், டாக்டர். ரெட்டிஸ் லேபரட்டரீஸ் 2.53% என்ற அளவிலும், மஹிந்திரா & மஹிந்திரா 2.48% என்ற அளவிலும், இண்டஸ்லண்ட் வங்கி 2.30% என்ற அளவிலும், ஐஷர் மோட்டார்ஸ் 1.57% என்ற அளவிலும், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.35% என்ற அளவிலும் ஏற்றம் கண்டன.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் 1.81% என்ற அளவிலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 1.58% என்ற அளவிலும், கோல் இந்தியா 1.58% என்ற அளவிலும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் 1.39% என்ற அளவிலும், அதானி துறைமுகங்கள் 1.07% என்ற அளவிலும் சரிவை சந்தித்தன.
No comments yet.