பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 1000க்கும் மேலான வேலைவாய்ப்புகள்! விவரம் இதோ…
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் இந்தியா முழுக்க பல்வேறு பிரிவுகளில் 1000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 31, 2024
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கியானது அடுத்த ஆண்டிற்கான (2025) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு அலுவலர் (Specialist Officer) பதவிகளுக்கான மொத்தம் 1,267 காலிப்பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளிலும் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான bankofbaroda.co.in தளத்திற்கு சென்று இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வித்தகுதிகள் வேண்டும்? எப்படி விண்ணப்பம் செய்யலாம் என்பது குறித்த விவரங்களை இந்த செய்திகுறிப்பில் காணலாம்.
காலிபணியிட விவரங்கள் :
கிராமப்புற மற்றும் வேளாண் பிரிவு - 200
ரீடெய்ல் கடன் பிரிவு - 450
MSME வங்கி சேவை பிரிவு - 331
தகவல் பாதுகாப்பு பிரிவு - 9
மேலாண்மை பிரிவு - 22
கார்ப்பரேட் கடன் பிரிவு - 30
நிதி பிரிவு - 13
தகவல் தொழில்நுட்ப பிரிவு - 177
தரவு மேலாண்மை பிரிவு - 25
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ஏற்றாற்போல பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், சில பிரிவுகளுக்கு தேவையான முன்அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு :
- 1 டிசம்பர் 2024-இன் படி வயது கணக்கிடப்படும்.
- அரசாங்க விதிகளின் அடிப்படையில் வயது சலுகைகள் வழங்கப்படும்.
முக்கிய தேதிகள் :
- அறிவிப்பு வெளியான தேதி : 27 டிசம்பர் 2024
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி : 28 டிசம்பர் 2024
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 17 ஜனவரி 2025
- கட்டணம் செலுத்த கடைசி நாள்: 17 ஜனவரி 2025
- தேர்வு தேதி: இறுதி செய்யப்படவில்லை.
விண்ணப்ப கட்டணம் :
- பொது / OBC / EWS : ரூ. 600
- SC ST / மாற்றுத் திறனாளிகள் / பெண்கள் : ரூ. 100
- கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், பாங்க் ஆஃப் பரோடா அதிகாரப்பூர்வ இணையதளமான bankofbaroda.co.in இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
- அதன்பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் "Careers" பகுதியில் உள்ள SO Recruitment 2024-25 லிங்கை கிளிக் செய்யவும்.
- அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உரிய ஆவணங்களை கொண்டு வைத்து பூர்த்தி செய்து, அத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றவும்.
- அதன்பிறகு விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
தேர்வு முறை :
- ஆன்லைன் தேர்வு
- குழு விவாதம் (Group Discussion)
- தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview)
ஆகியவற்றின் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
No comments yet.