தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

தொடர் இறங்கு முகத்தில் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் இதோ…

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 109.12 புள்ளிகள் சரிந்து 78,139.01 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 0.10 புள்ளிகள் சரிந்து 23,644.80 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 2, 2025

நேற்றுபோல இன்றும் பங்கு சந்தை சரிவில் நிறைவடைந்துள்ளது. இன்றயை நிலவரப்படி (டிசம்பர் 31)  தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 0.10 ( -0.00%) புள்ளிகள் அளவுக்கு குறைந்து 23,644.80 என்கிற சரிவான அளவில் வர்த்தகம்நிறைவடைந்திருக்கிறது. இன்று முழுவதும் சரிவை கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 23,460.45  என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,689.85  என்ற அளவு வரையிலும் சென்றது. 

அதைப்போல,மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் நிலவரத்தை பொறுத்தவரையில், 77,560.79 முதல் 78,305.34 வரை வர்த்தகமானது, இறுதியில் 109.12 புள்ளிகள் மட்டும் சற்று குறைந்து 78,139.01 என்ற அளவில் சரிவான நிலையில், முடிவடைந்தது.

மேலும், நேற்று மிட்கேப் குறியீடு நிஃப்டி 50ஐ விட சிறப்பாக செயல்பட்ட நிலையில், இன்று மிட்கேப் குறியீடு , நிஃப்டி 50ஐ விட பின்தங்கியது. அதன்படி, நிஃப்டி மிட்கேப் 50 0.35% சரிந்தது. மாறாக, நிஃப்டி ஸ்மால் கேப் 100, 129.25 புள்ளிகள் அல்லது 0.69% அதிகரித்து 18,639.95 இல் முடிவடைந்ததால், ஸ்மால்-கேப் பங்குகள் அவற்றின் பெரிய பங்குகளை விட சிறப்பாக செயல்பட்டன.

எந்தெந்த நிறுவனங்கள் இன்று உயர்வை கண்டது..எந்தெந்த நிறுவனங்கள் சரிவை கண்டது என்பது பற்றியும் கீழே காணலாம்… 

சென்செக்ஸ் :

மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டியவர்கள்: கோட்டக் மஹிந்திரா வங்கி 2.49%, ஐடிசி 1.37%, அல்ட்ராடெக் சிமென்ட் 1.10% வரை, டாடா மோட்டார்ஸ் 0.95% , டாடா ஸ்டீல் 0.88% வரை என்ற அளவிலும் உயர்வை கண்டன.  

டெக் மஹிந்திரா 2.35% சரிவு, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.48% சரிவு, இன்ஃபோசிஸ் 1.31%, ஐசிஐசிஐ வங்கி0.92%, பஜாஜ் ஃபைனான்ஸ் 0.83%  என்ற அளவிலும் சரிவை கண்டன.

நிஃப்டி :

தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டியில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2.90%, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் 2.84%, கோடக் மஹிந்திரா வங்கி 2.61%, ட்ரெண்ட் 2.43%, கோல் இந்தியா 1.65% வரை என்ற அளவுகள் வரை ஏற்றத்தை கண்டன.

அதானி எண்டர்பிரைசஸ் 2.46%, டெக் மஹிந்திரா 1.99%, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 1.54%,  இன்ஃபோசிஸ் 1.36%,  ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 1.02%  ஆகிய அளவுகளில் சரிவை கண்டது. 

 

Tags:SensexNSENifty 50Today Stock MarketStock Market