- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Breaking : 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! வலுக்கும் ‘வாரத்தில் 5 நாட்கள் வேலை’ கோரிக்கை…
வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பதை வலியுறுத்தும் வகையில், பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை AIBOC முன்னெடுத்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 7, 2025
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாள் என்ற கோரிக்கை வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கனவாகவே இருந்து வருகிறது. தற்போது மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகப்படியான வேலைப்பளு ஏற்படுவதுடன் ஊழியர்கள் மனச்சோர்வு அடைகின்றனர். சில சமயம் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடமுடியாத சூழலும் உருவாகிறது.
ஏமாற்றத்தில் ஊழியர்கள் :
வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கும் என்று காத்திருந்த வங்கி ஊழியர்களுக்கு இதுவரையில் ‘வாரத்தில் 5 நாட்கள் வேலை நாள் ’ என்ற கோரிக்கை குறித்து எந்தவித இசைவும் கிடைக்கப்பெறவில்லை. கடந்த வருட (2024) இறுதியில் மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்துவிடும், இந்த வருட தொடக்கத்தில் அறிவிப்பு வந்துவிடும் என்று எதிர்பார்த்த ஊழியர்களுக்கு தற்போது வரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
IBA - UFBU :
இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (IBA) மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் (UFBU) பல மாதங்களாக ஐந்து நாள் வேலை வாரத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை நிறைவேற்றம் செய்யவும், அதன் மூலம் வங்கி திறனை அதிகரிக்கவும் இக்கோரிக்கை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் :
கடந்த 2025 டிசம்பர் மாதத்திலேயே வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கை நிறைவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (IBA) மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் (UFBU) ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இதுபற்றி மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தஒரு இசைவும் வந்தபாடில்லை.
AIBOC (All India Bank Officers' Confederation) பொதுச்செயலாளர் ரூபம் ராய் கடந்த 2024 டிசம்பரில் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "தற்போது வரை வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த அறிகுறியும் இல்லை. இதனால் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்." என தெரிவித்திருந்தார்.
நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் :
இதனை அடுத்து நமது கனல் செய்தி நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ‘வாரத்தில் 5 நாட்கள் வேலை நாள்’ என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்னிறுத்தி வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் முழு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக AIBOC தலைமையிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ வேலைநிறுத்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்நோக்கப்படுகிறது.
4 நாட்கள் வங்கி செயல்படாது
பிப்ரவரி 22ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் வழக்கமான வங்கி விடுமுறை, அடுத்த நாள் பிப்ரவரி 23 ஞாயிறு பொது விடுமுறை என்பதால் பிப்ரவரி 22 முதல் 25ஆம் தேதி வரையில் 4 நாட்கள் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது என கூறப்பட்டுள்ளது.