தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Thursday, May 15, 2025 | India
Home / இந்தியா

சரிவுடன் நிறைவடைந்த இன்றைய பங்குச்சந்தை நிலவரம்…

இன்று (ஜனவரி 8) தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 18.95 புள்ளிகள் குறைந்து 23,688.95 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 50.62 புள்ளிகள் குறைந்து 78,148.49 எனவும் நிறைவு பெற்றுள்ளன.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 8, 2025

இந்த வார தொடக்கத்தில் சரிவை சந்தித்த பங்குச்சந்தை நேற்று சற்று உயர்வை கண்டது. இன்று மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்தது பங்குச்சந்தை நிலவரம். இன்றைய நிலவரப்படி (ஜனவரி 8)  தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 18.95  (-0.08%) புள்ளிகள் அளவுக்கு குறைந்து 23,688.95 என்கிற அளவில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்று முழுவதும் சரிவை கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 23,496.15 என்ற அளவிலும் அதிகபட்சமாக 23,751.85 என்ற அளவு வரையிலும் சென்றது. 

அதைப்போல, மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் நிலவரத்தை பொறுத்தவரையில், இன்று 77,486.79 புள்ளிகள் முதல் 78,319.45 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இறுதியில், 50.62 புள்ளிகள் சரிந்து (-0.06%) 78,148.49 என்ற அளவில் இன்றைய மும்பை பங்குச்சந்தை முடிவடைந்தது.

மிட்கேப் குறியீடானது, நிஃப்டி 50 உடன் ஒப்பிடும்போது சற்று பின்தங்கியது. நிஃப்டி மிட்கேப் 50யானது, 1.11% குறைந்துள்ளது. இதேபோல், ஸ்மால் கேப் பங்குகளும் நிஃப்டி 50க்கு பின்தங்கியுள்ளன, நிஃப்டி ஸ்மால் கேப் 100ஆனது, 307.8 புள்ளிகள் குறைந்து 18,673.45 என்ற புள்ளிகள் அளவில் முடிவடைந்தது. 

எந்தெந்த நிறுவனங்கள் இன்று உயர்வை கண்டது..எந்தெந்த நிறுவனங்கள் சரிவை கண்டது என்பது பற்றியும் கீழே காணலாம்… 

சென்செக்ஸ் : 

மும்பை பங்குசந்தையில் (BSE) அதிக லாபம் ஈட்டியவர்கள் லிஸ்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (+1.97%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (+1.92%), ஐடிசி (+1.90%), ஏசியன் பெயிண்ட்ஸ் (+1.80%), மற்றும் விப்ரோ (+1.11%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

அல்ட்ராடெக் சிமென்ட் (-1.75%), லார்சன் & டூப்ரோ (-1.26%), சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (-1.19%), HDFC வங்கி (-1.16%), மற்றும் ஐசிஐசிஐ வங்கி (-1.11%) ஆகியவை இன்று சரிவை சந்தித்தன.

நிஃப்டி :

தேசிய பங்குச்சந்தை (NSE) நிலவரப்படி அதிக லாபம் ஈட்டியவர்கள் பட்டியலில் ஆயில் & நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் (+2.98%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (+1.99%), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (+1.99%), ஐடிசி (+1.92%), மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் (+1.82%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

அதிக நஷ்டம் அடைந்தவர்கள் பட்டியலில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் (-3.95%), டிரெண்ட் (-2.55%), ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (-2.02%), பஜாஜ் ஆட்டோ (-1.91%), மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் (-1.85%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

Tags:Today Stock MarketStock MarketNSESensexBSENifty 50

No comments yet.

Leave a Comment