தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Sunday, Jul 6, 2025 | India

Advertisement

Home / இந்தியா

தொடர் சரிவுடன் இந்திய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் இதோ…

இன்று (ஜனவரி 9) தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 162.45 புள்ளிகள் குறைந்து 23,526.50 எனவும், மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் 528.28 புள்ளிகள் குறைந்து 77,620.21 எனவும் நிறைவு பெற்றுள்ளன.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 9, 2025

Advertisement

இந்த வார தொடக்கத்தில் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, ஜனவரி 7இல் மட்டும் சற்று உயர்வை கண்டது. அதனை தொடர்ந்து மீண்டும் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று போலவே இன்றும் சரிவுடன் நிறைவடைந்தது இந்திய பங்ச்சந்தை. 

இன்றைய (ஜனவரி 9) நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி குறியீடு எண் 162.45  (-0.69%) புள்ளிகள் அளவுக்கு குறைந்து 23,526.50 என்கிற அளவில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இன்று முழுவதும் சரிவை கண்ட நிஃப்டி குறைந்தபட்சம் 23,503.05 என்ற அளவிலும் அதிகபட்சமாக  23,689.50 என்ற அளவு வரையிலும் சென்றது. 

Advertisement

அதேபோல, மும்பை பங்குச்சந்தை (BSE) சென்செக்ஸ் நிலவரத்தை பொறுத்தவரையில், இன்று 78,206.21 புள்ளிகள் முதல் 77542.92 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இறுதியில், 528.28 புள்ளிகள் சரிந்து (-0.68%) 77,620.21 என்ற அளவில் இன்றைய மும்பை பங்குச்சந்தை முடிவடைந்தது.

நிஃப்டி 50 உடன் ஒப்பிடும்போது மிட்கேப் இன்டெக்ஸ் பங்குகள் சற்று பின்தங்கின. நிஃப்டி மிட்கேப் 50யானது 0.75% குறைந்தது. நிஃப்டி ஸ்மால் கேப் 100ஆனது, 18,365.65-ல் முடிவடைந்ததால், ஸ்மால் கேப் பங்குகள் நிஃப்டி 50க்கு பின்தங்கின. இது 247.3 புள்ளிகள் சரிவை கண்டது.

எந்தெந்த நிறுவனங்கள் இன்று உயர்வை கண்டது, எந்தெந்த நிறுவனங்கள் சரிவை கண்டது என்பது பற்றியும் கீழே காணலாம்… 

சென்செக்ஸ்:

மும்பை பங்குசந்தை (BSE) சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டியவர்கள் லிஸ்டில் நெஸ்லே இந்தியா (+1.87%), இந்துஸ்தான் யூனிலீவர் (+1.50%), மஹிந்திரா & மஹிந்திரா (+1.38%), கோடக் மஹிந்திரா வங்கி (+1.26%), ஏசியன் பெயிண்ட்ஸ் (+0.69%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

அதிக நஷ்டமடைந்தவர்கள் பட்டியலில், டாடா ஸ்டீல் (-2.07%), லார்சன் & டூப்ரோ (-1.88%), டாடா மோட்டார்ஸ் (-1.86%), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (-1.72%), விப்ரோ (-1.71%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

நிஃப்டி:

தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டியவர்கள் பட்டியலில் பஜாஜ் ஆட்டோ (+2.24%), நெஸ்லே இந்தியா (+1.63%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (+1.43%), பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (+1.37%), மஹிந்திரா & மஹிந்திரா (+1.31% ) ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ளன.

அதிக நஷ்டமடைந்தவர்கள் லிஸ்டில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் (-3.07%), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (-3.00%), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (-2.37%), கோல் இந்தியா (-2.14%), டாடா ஸ்டீல் (-2.04%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

Tags:Today Stock MarketStock MarketSensexNifty 50NSEBSE

No comments yet.

Leave a Comment