ரூ.40 லட்சத்திற்கு மேல் வருமானம்! தமிழ்நாட்டில் பானிபூரி கடைக்காரருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
பானிப்பூரி விற்பனையாளர் ஒருவர், கடந்த வருடம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.40 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றிருப்பது வருமான வரித்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், அவருக்கு வருமானவரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 10, 2025
தமிழகத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் பானிபூரி கடையின் மூலம் லட்சகணக்கில் வருமானத்தை ஈட்டியுள்ளார். வருமான வரித்துறை நோட்டீஸில் வெளியான தகவலின் படி, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை நல்ல லாபகரமாக கடை நடந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட இவருடைய பானிபூரி கடையில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மட்டுமே ரூ 40 லட்சம் வரவு வந்திருக்கிறது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் வருமானம்: இந்த பானிப்பூரி விற்பனையாளர் டிஜிட்டல் கட்டண முறைகள், குறிப்பாக Razorpay மற்றும் PhonePe போன்ற செயலிகளை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அவர் ரூ.40 லட்சம் வருமானம் பெறுகிறார். இந்த தொகை பெரியது என்பதால் வருமான வரித்துறை அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் : அவருக்கு வரும் நோட்டீஸ், 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி, தமிழ் நாடு GST சட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டிஸில் வரம்பை மீறிய தொகை பரிமாற்றம் நிகழ்ந்த பின்னரும் ஜிஎஸ்டி பதிவு இல்லாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான நோட்டிஸ் பார்த்த பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர். அதற்கு காரணம் நோட்டிஸ் பார்த்து இல்லை பானி பூரி மூலம் இவ்வளவு தொகை சம்பாதிக்க முடியுமா? என்பது தான். எனவே, இது உண்மையில் வந்ததா? அல்லது வதந்தியா என்பது பற்றிய தகவலும் வெளிவரவில்லை. அந்த பானிபூரி கடைக்காரர் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் கடை வைத்திருக்கிறார் என்ற தகவலும் இதுவரை தெரியவரவில்லை.
ஒரே நாள் வரம்பு (பிரிவு 269ST) :
வருமான வரி செலுத்தாத நபரின் வங்கி கணக்கில் ஒரே நாளில், ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதியில்லை. இது அனைத்து தனி நபர் பரிவர்த்தனைக்கும் பொருந்தும். ஒருவர் தனது வீட்டு விஷேசத்திற்காக கூட ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி இல்லை. மேலும், வியாபாரத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை செய்யவும் அனுமதி இல்லை.
மீறினால் என்ன நடக்கும்?
இந்த வருமான வரித்துறை விதிகளை மீறுவது சட்டத்தை மீறிய செயலாக கருதப்படுகிறது. விதிமீறல் தொடர்பாக வருமான வரி துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, விதிமீறல் நிரூபிக்கப்பட்டால் அதற்கான அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
No comments yet.