- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பட்ஜெட் 2025 : எதிர்பார்க்கப்படும் முக்கிய 5 வருமானவரி சீர்திருத்தங்கள் இதோ…
வருமானவரி உச்ச வரம்பு அதிகரித்தல், நிலையான வரி பிடித்த உச்சவரம்பு அதிகரித்தல், தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பு உள்ளிட்ட வருமானவரி மாற்றங்கள் பட்ஜெட் 2025-ல் எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வருமான வரி ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: January 13, 2025
வரும், பிப்ரவர் 1-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி நாடாளுமன்றத்தில் ‘மத்திய பட்ஜெட் 2025’-ஐ தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்பது பல்வேறு வருமானவரி திருத்தங்களை எதிர்நோக்கியுள்ளது. ‘
அதில், பட்ஜெட் 2025-ல் எதிர்நோக்கப்படும் முக்கிய 5 வருமானவரி சீர்திருத்தங்கள் குறித்து தனியார் வருமான வரி நிபுணர் பல்வந்த் ஜெயின், தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதில் வருமானவரி உச்சவரம்பு, தங்கம் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இருக்கக்கூடும் என அவர் குறிப்பிடுகிறார்.
1.வருமான வரி உச்சவரம்பு உயர்வு :
வருமான வரி செலுத்துவோருக்கு சில சலுகைகளை வழங்குவதன் மூலம் அவர்களை அரசாங்கம் மேலும் ஊக்குவிக்கலாம். பணவீக்கத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப வருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கலாம் என பேசப்படுகிறது என்றும். வழக்கமான முறையை தவிர்த்து ரூ.20 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 30% வருமான வரி விதிக்கலாம் என்றும் பல்வந்த் ஜெயின் குறிப்பிடுகிறார்.
பழைய நடைமுறை :
- ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையில் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை.
- ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் வருமானத்தில் 5%-ஐ வாரியாக செலுத்த வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்தில் 10% வரை வருமான வரி செலுத்த வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையில் ஆண்டு வருமானத்தில் 15% வரையில் வருமான வரி செலுத்த வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானத்தில் 20% வரை வருமான வரி செலுத்த வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானத்தில் 30%-ஐ வரியாக செலுத்த வேண்டும்.
2.மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சலுகைகள் :
மூத்த குடிமக்களான 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக வரிவிலக்கு உச்சவரம்பு அல்லது குறைந்த வரி விகிதம் விதிக்கப்படலாம் என்று பல்வந்த் ஜெயின் கூறினார். வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
3.நிலையான கழித்தல் :
மாத சம்பளம் பெரும் ஊழியர்களில் ரூ.50 ஆயிரதிற்கு மேல் சம்பளம் வாங்குவோரின் ஊதியத்தில் நிலையான வருமான வரி கழித்தல் செய்யப்பட்டு வருகிறது. இந்த உச்ச வரம்பு ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது என்றும், இந்த உச்ச வரம்பை ரூ.1 லட்சம் வரையில் கூட உயர்த்தலாம் என்று பல்வந்த் ஜெயின் பரிந்துரைத்துள்ளார்.
4.தங்கம் இறக்குமதி வரி :
உள்நாட்டு வர்த்தகம் குறைவு, அதிகப்படியான இறக்குமதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரிக்க செய்யலாம் என்று மற்றொரு வர்த்தக நிபுணர் சுகந்தா கூறினார்.
5.பிரிவு 80சி விலக்கு :
வருமான வரிப்பிரிவு 80சி-ன் கீழ் அதிகபட்ச வரி விலக்கு ரூ.1 லட்சமானது, 2014 ஆம் ஆண்டில், சில சலுகைகள் அளிக்கப்பட்டு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது, ஆனால், இந்த உயர்வு தற்போதுள்ள பணவீக்கத்திற்கு ஏற்ப போதுமானதாக இல்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.
தற்போதுள்ள பணவீக்க உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், வரி செலுத்துவோர் மீது அதிகரித்து வரும் நிதிச் சுமையால், பிரிவு 80சி வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கபடலாம் என்றும் பலவந்த் ஜெயின் கூறினார்.
மேற்கண்ட எதிர்பார்ப்புகள் அனைத்தும் தனியார் வருமான வரி நிபுணரின் சொந்த கருத்துக்கள் ஆகும். வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2025இல் இந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.