தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! 8-வது ஊதியகுழுவுக்கு ஒப்புதல் வழங்கிய அமைச்சரவை!

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சலுகைகள் உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்ள 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 16, 2025

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அலவன்ஸ்களை மாற்றியமைப்பதற்கான 8-வது ஊதியக் குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்...

ஊதியக் குழு என்றால் என்ன? 

ஊதியக் குழு என்பது நாட்டின் பணவீக்கம், விலைவாசி மற்றும் அரசின் வருவாய் நிலையை ஆராய்ந்து, ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் தொடர்பாக பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் ஒரு குழு. 

ஊதியக்குழு கொடுத்த இந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்ற சலுகைகள் குறித்த மாற்றங்களை அமல்படுத்தும். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பில் இருந்த போது 7வது ஊதிய கமிஷன் பிப்ரவரி 28, 2014-ல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் நவம்பர் 19, 2015-ல் சமர்பிக்கப்பட்டு ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த பரிந்துரையானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்படுத்தப்படும்.

அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அறிவிப்பு 

இந்நிலையில், 10 ஆண்டுகள் கடந்த நிலையில், 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  இன்று (ஜனவரி 16) செய்தியாளர்களை சந்தித்தபோது அறிவித்தார்.

2026ம் ஆண்டுக்குள் 8வது ஊதியக் குழு செயல்படுத்தப்படும் எனவும், அதன் பரிந்துரைகள் அமைப்புக்குப் பின் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை  45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 8-வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகவும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

7வது ஊதியக் குழு: கொண்டு வந்த மாற்றங்கள்!

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2015 நவம்பரில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, 2016 ஜனவரியில் அமலுக்கு வந்தன. இதன் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 வரை செல்லும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளங்களில் முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் ரூ7,000 இருந்த குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. அதேசமயம், அதிகபட்ச சம்பளம் ரூ 90,000 இருந்து ரூ 2,50,000 ஆக உயர்த்தப்பட்டது. 

ஓய்வூதியங்களிலும் முக்கியமான உயர்வு கொண்டுவந்தது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 இருந்து ரூ.9,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.45,000 இருந்து ரூ.1,25,000 ஆகவும் மாற்றம் செய்யப்பட்டன. இதற்கான கணக்கீட்டில் 2.57 ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்பட்டது, இது சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்விற்கு அடிப்படையாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய குழு பொருளாதார சூழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றை ஆய்வு செய்து ஊழியர்களின் சம்பள மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளை வழங்கும்.

8-வது ஊதியக் குழு எப்போது? 

மேலும், 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த  2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அதனை தொடர்ந்து 2025-ம் ஆண்டுக்குள் இந்த குழுவுக்கான அங்கீகாரம் மற்றும் அதன் உறுப்பினர்களை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

Tags:8th Pay CommissionCentral government employeesCentral government