"உணவு கொடுக்காமல் என்னை அடித்து, சித்திரவதை செய்தனர்" - நடிகை ரன்யா ராவ் பகீர் குற்றசாட்டு.!
வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI ) அதிகாரிகள் 15 முறை அடித்ததாக தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Author: Gowtham
Published: March 15, 2025
துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி, நடிகை ரன்யா ராவ்க்கு தங்கம் கடத்திய விவகாரத்தில் ஜாமீன் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
தற்பொழுது ,"நான் தங்கத்தை கடத்தவே இல்லை, அதிகாரிகள் என்னை அடித்து துன்புறுத்தி கையெழுத்து வாங்கினர். பொய்யான வழக்கில் சிக்க வைக்க, என்னை சித்ரவதை செய்கின்றனர்" என்று அதிர்ச்சிகரமான குற்றம்சாட்டை முன் வைத்துள்ளார் ரன்யா ராவ்.
கடந்த வாரம் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்ட அவர், அதனை மறுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தங்கக் கடத்தல் வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
தான் விமான நிலையத்திலிருந்து கைது செய்யப்படவில்லை, மாறாக விமானத்திலிருந்து நேரடியாகக் கைது செய்யப்பட்டதாகவும் என்னை கட்டாயப்படுத்தி 50-60 பக்கத்தில் கையெழுத்து வாங்கினர், அதில் 40 பக்கம் வெற்று காகிதம், அடித்த அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும், DRI காவலின் போது, என்னை சரியாக தூங்கவும் விடவில்லை என்றும், தனக்கு உணவுகளும் வழங்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, 'நான் ஒரு நான் நிரபராதி, பொய்யாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். கைது செய்யும்பொழுது சோதனை நடத்தப்படவில்லை, என்னிடமிருந்து எதுவும் மீட்கப்படவில்லை.
சில டெல்லி அதிகாரிகள் மற்ற பயணிகளைப் பாதுகாக்கவும், என்னை இதில் சிக்க வைக்கவும் விரும்புகிறார்கள். நான் கைது செய்யப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை, தன்னை பற்றிய ஆதாரமற்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments yet.