- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஐபிஎல் முடிந்ததும் நீல ஜெர்சி! இந்தியாவுக்காக விளையாடப்போகும் அந்த மூன்று வீரர்கள்?
பிரியான்ஷ் ஆர்யா, அசுதோஷ் சர்மா, ஷஷாங்க் சிங் ஆகியோர் ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Author: Bala Murugan K
Published: March 27, 2025
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் சர்வதேச போட்டியில் அறிமுகமாகி அடுத்தடுத்து இந்திய அணிக்காக விளையாடுவார்கள். அப்படி தான் இஷன், கில், பண்ட் போன்ற வீரர்கள் ஐபிஎல் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்கள்.
அவர்களை தொடர்ந்து அவர்களை போலவே இந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய 3 வீரர்களை இந்திய அணியில் அறிமுகம் செய்ய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மட்டும் அணியின் தேர்வாளர் அகர்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்பது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
பிரியான்ஷ் ஆர்யா (Priyansh Arya)
24 வயதான பிரியான்ஷ் டெல்லியைச் சேர்ந்த பிரியான்ஷ், உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தால் பிரபலமானவர். 2024 டெல்லி பிரீமியர் லீக்கில் (DPL) 10 இன்னிங்ஸ்களில் 608 ரன்கள் குவித்து, 2 சதங்களும் 4 அரைசதங்களும் அடித்து முதலிடத்தில் இருந்தார். அவரது மிகப்பெரிய சாதனை, வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸுக்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து 50 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தது. 2023-24 சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் டெல்லிக்காக அதிக ரன்கள் (222) எடுத்தவர்.
ஐபிஎல் 2025: புஞ்சாப் கிங்ஸ் அணி இவரை ரூ.3.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மார்ச் 25, 2025 அன்று குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 23 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அறிமுகத்தில் அசத்தினார். அதிரடி தொடக்கம் கொடுப்பதில் வல்லவர். பவர் பிளேயில் பந்து வீச்சை தாக்கி, அணிக்கு வேகமான ஆரம்பத்தை அளிக்கிறார். எனவே இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
2. அசுதோஷ் சர்மா (Ashutosh Sharma)
26 வயதான அசுதோஷ் சர்மா மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஐபிஎல் 2024-ல் புஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் 189 ரன்கள் எடுத்து, 186.13 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டுடன் அனைவரையும் கவர்ந்தார். இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸுக்கு எதிராக 156 ரன்கள் என்ற இலக்கை 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அழைத்துச் சென்றது அவரது மிகப்பெரிய சாதனை. சையத் முஷ்டாக் அலி டிராஃபியில் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர்.
புஞ்சாப் அணியால் ரூ. 20 லட்சத்திற்கு தக்க வைக்கப்பட்டவர். 2025 சீசனில் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக ஒரு சிறப்பான இன்னிங்ஸ் ஆடி, சாதிக்க முடியாத இலக்கை சாதித்து காட்டினார்.
பினிஷராக சிறப்பாக செயல்படுபவர். அழுத்தமான சூழல்களில் பெரிய ஷாட்களை ஆடி ஆட்டத்தை முடித்து வைப்பதில் வல்லவராக இருப்பதால் இவரை தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளது.
3. ஷஷாங்க் சிங் (Shashank Singh)
33 வயதான ஷஷாங்க் சிங் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர். ஐபிஎல் 2024-ல் புஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 354 ரன்கள் எடுத்து, 164.65 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முத்திரை பதித்தார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 61* (29 பந்துகள்) எடுத்து வெற்றி தேடித்தந்தது அவரது முக்கிய சாதனை. உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை, புதுச்சேரி, சத்தீஸ்கர் அணிகளுக்காக ஆடிய அனுபவம் கொண்டவர்.
புஞ்சாப் அணியால் ரூ. 20 லட்சத்திற்கு தக்கவைக்கப்பட்டவர். மார்ச் 25, 2025 அன்று குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக 16 பந்துகளில் 44* ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து, அணியை 243/5 என்ற பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தை தியாகம் செய்ய வைத்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெரிய ஷாட்கள் ஆடி, ஆட்டத்தை வேகமாக முடிக்கும் திறன். அணியின் தேவைக்கு ஏற்ப விளையாடுவதால் இவர்களை தேர்வு செய்யலாம்.
ஐபிஎல் 2025, 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்துவதற்கு ஒரு முக்கிய தளமாக இருக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20-யில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இளம் வீரர்களை உருவாக்குவதே கம்பீர் மற்றும் அகர்கரின் முதன்மை இலக்கு. எனவே மேலே குறிப்பிட்ட மூன்று வீரர்களும் ஐபிஎல் 2025-ல் தங்களது திறமைகளை நிரூபித்தால், அவர்கள் நேரடியாக இந்திய டி20 அணியில் அறிமுகமாகலாம்.