ஆண்ட பரம்பரையின் நிலைமையை பாருங்க.., மனதை தேற்றும் சென்னை - மும்பை ரசிகர்கள்.!
ஐபில் உலகின் ஆண்ட பரம்பரையாக அறியப்படும் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் 8-வது மற்றும் 9-வது இடங்களில் இருக்கின்றன.

Author: Gowtham
Published: April 9, 2025
ஐபிஎல் உலகின் ஆண்ட பரம்பரையாக அறியப்படும் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் நடப்பு ஐபிஎல் தொடரில் 8-வது மற்றும் 9-வது இடங்களில் இருக்கின்றன. இதனால், இந்த இரண்டு கிளப்களின் ரசிகர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
Advertisement
இதுவரை கோப்பையை வென்றிடாத டெல்லி கேபிடல்ஸ், இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட ஐந்து அணிகள் தலா ஆறு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.
ஐபிஎல் 2025 ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் (எல்எஸ்ஜி) நிக்கோலஸ் பூரன் மற்றும் மிட்செல் மார்ஷ் முறையே 87 மற்றும் 81 ரன்கள் எடுத்து முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.
Advertisement
ஊதா நிற தொப்பியைப் பெறுவதற்கான போட்டியில், சிஎஸ்கேவின் நூர் அகமது ஐந்து போட்டிகளில் 11 விக்கெட்டுகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது அணி வீரர் கலீல் அகமது மற்றும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலா பத்து விக்கெட்டுகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
இருப்பினும் நடப்பு சீசனில் தொடர்ந்து 4 மேட்சில் தோற்று, பரிதாபமான சூழலில் சிஎஸ்கே உள்ளது. இதே சூழலை முன்னரே ஒரு முறை சென்னை அணி சந்தித்துள்ளது. 2022ல், 4 மேட்சில் வரிசையாகசிஎஸ்கே தோற்றது. ஆனால், 5-வது மேட்சில் வென்றது. அந்த வருடம் தான் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே-வின் மிக மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.
Advertisement
ஆனால், இதுவரை 5 மேட்சில் தொடர்ச்சியாக சிஎஸ்கே தோற்றது இல்லை. அடுத்து கொல்கத்தாவுடன் நடக்கும் மேட்சிலாவது வென்று, இந்த மோசமான ரெக்கார்ட்டை தவிர்க்குமா சிஎஸ்கே? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
No comments yet.
