தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / கிரிக்கெட்

CSKvsRCB : மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்கள்..பல கோடிகளை கல்லா கட்டிய சென்னை!

மார்ச் 28-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதுகிறது.

News Image

Author: Bala Murugan K

Published: March 25, 2025

ஐபிஎல் தொடர் தொடங்கிவிட்டது என்றாலே சென்னையில் நடைபெறும் போட்டிகளை பார்க்க மக்கள் குவிந்துவிடுவார்கள் என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், கடந்த மார்ச் 23-ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை விளையாடியபோது அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. 

அதைப்போலவே, இப்போது பெங்களூருக்கு எதிரான போட்டி வரும் மார்ச் 28-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு இன்று காலை தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட்டும் முன் பதிவு தொடங்கியவுடன் வேகமாக டிக்கெட்கள் விற்று தீர்ந்தது. 

முன்னதாகவே இந்த போட்டிக்கான டிக்கெட்கள் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும் வேணும் என்கிறவர்கள் அங்கு சென்று முன் பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.  இந்த டிக்கெட் விலை ரூ .1,700-ல் இருந்து ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை 10.15க்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டது. இதன் மூலம் சென்னை நிர்வாகத்திற்கு பல கோடிகள் இலாபம் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தின் மொத்த இருக்கை கொள்ளளவு சுமார் 38,000 முதல் 40,000 வரை உள்ளது. இதில் பாதுகாப்புக்காக இருப்பவர்கள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் சில முக்கிய பிரபலங்கள் ஆகியோருக்கு போக சுமார் 36,000 இருக்கைகள் பொதுமக்களுக்கு விற்பனைக்கு கிடைத்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையிலும் Sportstar செய்தியின்படி, டிக்கெட்கள் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் பெரும்பாலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன ("sell out" என்று குறிப்பிடப்பட்டுள்ளது). இதன் அடிப்படையிலும் பார்த்தால் மைதானத்தின் முழு கொள்ளளவும் (36,000 இருக்கைகள்) விற்றுத் தீர்ந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முந்தைய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு, சேப்பாக்கத்தில் நடக்கும் CSK போட்டிகளுக்கு 90% முதல் 100% இருக்கைகள் விற்பனையாகும். எனவே, சுமார் 36,000 டிக்கெட்கள் விற்கப்பட்டிருக்கலாம்.

வருமானம் எவ்வளவு? 

டிக்கெட் விலைகள் மற்றும் விற்கப்பட்ட டிக்கெட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வருமானத்தை கணக்கிடலாம்.

சராசரி டிக்கெட் விலை:

டிக்கெட் விலைகள் ரூ1,500 முதல் ரூ7,500 வரை இருந்தன. அதில், பெரும்பாலான ரசிகர்கள் மலிவு விலை டிக்கெட்களை (ரூ1,500 முதல் ரூ.4,500) வாங்கியிருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் பிரீமியம் டிக்கெட்கள் (ரூ.7,500) என்பதால் அதிகமானோர் அதனை வாங்கி இருக்கமாட்டார்கள்.  எனவே, சராசரி டிக்கெட் விலை ரூ.3,000 என்று நாம் வைத்து கொண்டால்  மொத்த வருமானம் = 36,000 × ₹3,000 = ₹10,80,00,000 (10.8 கோடி ரூபாய்) சென்னை நிர்வாகத்திற்க்கு வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:csk ticketscsk vs rcb ticketsRoyal Challengers Bengalurucskcsk vs rcbIPL 2025