- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இவரு இன்னும் திருந்தல மாமா..மீண்டும் கொண்டாட்டத்தில் இறங்கி அபராதத்தை வாங்கிக்கொண்ட திக்வேஷ்?
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய பிறகு மீண்டும் திக்வேஷ் நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Author: Bala Murugan K
Published: April 8, 2025
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (LSG) அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி சிறப்பாக பந்துவீசி பிரபலமானரோ இல்லையோ நோட்புக் கொண்டாட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம். இந்த சீசனில் சர்ச்சைக்குரிய கொண்டாட்டங்களாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல்-இன் நடத்தை விதிமுறைகள் (IPL Code of Conduct) பிரிவு 2.5-ன்படி, ஒரு வீரர் அவுட் ஆன பிறகு அவரை ஆத்திரமூட்டும் (provocative) அல்லது இழிவுபடுத்தும் (offensive) வகையில் செயல்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. என்கிற காரணத்தால் அவருடைய கொண்டாட்டத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது, ஏற்கனவே, அவருக்கு 2 முறை அபராதம் விதிக்கப்பட்டது.
அவருக்கு விதிக்கப்பட்ட அபராத விவரம்
ஏப்ரல் 1, 2025 - LSG vs PBKS போட்டியில், பிரியன்ஷ் ஆர்யாவை அவுட் செய்த பிறகு "நோட்புக்" கொண்டாட்டத்திற்காக 25% மேட்ச் ஃபீ (ரூ. 1,87,500) அபராதம் + 1 டிமெரிட் புள்ளி.
ஏப்ரல் 4, 2025 - LSG vs MI போட்டியில், நமன் திரை அவுட் செய்த பிறகு மீண்டும் அதே கொண்டாட்டத்திற்காக 50% மேட்ச் ஃபீ (ரூ. 3,75,000) அபராதம் + 2 டிமெரிட் புள்ளிகள்.
மொத்தம்: ரூ. 5,62,500 அபராதம் மற்றும் 3 டிமெரிட் புள்ளிகள்.
4 டிமெரிட் புள்ளிகள் ஆனால்: ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 7.3-ன்படி, ஒரு வீரர் 12 மாதங்களுக்குள் 4 டிமெரிட் புள்ளிகளை பெற்றால், அது நிலை 1 மீறலாக (Level 1 Offence) மாறி, ஒரு போட்டியில் தடை (1-match suspension) விதிக்கப்படும். எனவே, மீண்டும் அவர் அப்படியான கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மீண்டும் எப்போது கொண்டாடினார்?
இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது திக்வேஷ் ரதி தனது முதல் பந்திலேயே சுனில் நரைனை அவுட் செய்தார். அவர் ஒரு "ராங்-அன்" (wrong'un) பந்தை வீசினார், இது நரைனை திசைதிருப்பி, அவரது முயற்சியான லாஃப்டட் ஷாட்டை தோல்வியடையச் செய்தது. பந்து ஏடன் மார்க்ரமிடம் கேட்ச் ஆனது.
விக்கெட் எடுத்த குஷியில் நரைனை அவுட் செய்த பிறகு, திக்வேஷ் மீண்டும் தனது "நோட்புக்" கொண்டாட்டத்தை செய்தார். தரையில் அமர்ந்து கொண்டு நரேன் பெயரை எழுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அபராதம் விதித்தால் என்ன பரவாயில்லை என்பது போல அவர் தொடர்ச்சியாகவே இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் இன்னும் திருத்தல மாமா என்பது போல பட வசனங்களை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.
மீண்டும் அபராதம் விதிக்கப்படுமா?
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இன்னும் அவருக்கு அபராதம் வழங்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் அவருக்கு ஏற்கனவே 2 முறை இந்த காரணத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட காரணத்தால் மீண்டும் அதனை செய்துள்ளதால் இப்படியான கேள்விகள் எழுந்துள்ளது.
ஏன் தொடர்கிறார்?
திக்வேஷ் இந்த கொண்டாட்டத்தை ஏன் செய்கிறார் என்று அவரது சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் விசாரித்தபோது, அவர் ஒரு நகைச்சுவையான பதிலை அளித்தார். கொல்கத்தாவில் பயிற்சியின்போது, சுனில் நரைனை சந்தித்தபோது, நிக்கோலஸ் பூரன் "நரைன் கொண்டாடுவதில்லை, நீ ஏன் கொண்டாடுகிறாய்?" என்று கேட்டார். அதற்கு திக்வேஷ், "நான் டெல்லியைச் சேர்ந்தவன்" என்று பதிலளித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். இது அவரது விளையாட்டுத்தனமான குணத்தையும், இந்த கொண்டாட்டத்தை தொடர அவரது உறுதியையும் காட்டுகிறது.