Advertisement
த.வெ.க தலைவர் விஜய் என்ன போன் வச்சிருக்காரு தெரியுமா? விலை கேட்ட ஷாக் ஆகிடுவீங்க!
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் கையில் வாட்ச் மற்றும் ஷூ அணிந்து வந்தாலே உடனடியாக அதனுடைய விலை பற்றிய விவரத்தை இணையவாசிகள் தோண்டி எடுத்துவிடுவார்கள்.

Author: Bala Murugan K
Published: March 8, 2025
Advertisement
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் கையில் வாட்ச் மற்றும் ஷூ அணிந்து வந்தாலே உடனடியாக அதனுடைய விலை பற்றிய விவரத்தை இணையவாசிகள் தோண்டி எடுத்துவிடுவார்கள்.
அப்படி கண்டுபிடித்து இவர் அணிந்திருக்கும் சட்டை எவ்வளவு தெரியுமா? இவ்வளவா? என சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட தொடங்கிவிட்டுவார்கள். அப்படி தான் தற்போது நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் வைத்திருக்கும் போன் என்னது? மற்றும் அதனுடைய விலை குறித்த தகவலும் பரவி வருகிறது. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Advertisement
இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி
அரசியல் கட்சியை தொடங்கியதில் இருந்து விஜய் தொடர்ச்சியாக அரசியலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மற்றோரு பக்கம் ஒரு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படி பிஸியான சூழலில், நேற்று தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை கைலி மற்றும் சட்டையில் தோன்றி, தலையில் தொப்பி அணிந்திருந்தார். நோன்பு திறப்பதற்கு முன்பு சிறப்பு தொழுகையில் (துவா) அவர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். பின்னர், நோன்பு திறக்கும் விதமாக ஜூஸ், பேரீச்சம் பழம், நோன்பு கஞ்சி ஆகியவற்றை உட்கொண்டு நோன்பு திறந்து வைத்தார்.
லீக்கான போன்
நோன்பு திறக்கும் இந்த நிகழ்வுக்கு வரும்போது தான் விஜய் என்ன போன் பயன்படுத்துகிறார் என்பது பற்றிய விவரம் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்பு விஜய் கேரவேனில் இருந்துகொண்டு போன் பயன்படுத்தி கொண்டு இருந்தார். அப்போது அவர் ஐபோன் பயன்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
என்ன போன் விலை எவ்வளவு?
விஜய் பயன்படுத்தும் போன் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 16 Pro Max) இதனுடைய விலை ரூ.1,33,400 (ஒரு லட்சத்து முப்பத்துமூன்று ஆயிரத்து நானூறு ரூபாய்) இருக்கும். இந்த போனை தான் விஜய் தற்போது பயன்படுத்தி வருகிறார். இதனுடைய விலையை கேட்ட நெட்டிசன்கள் எம்மாடி இவ்வளவு ரூபாயா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
No comments yet.